கற்பிட்டி பிரதேச சபைத் தலைவர் மீது தாக்குதல்.!
[2025-06-17 12:38:27] Views:[95] கற்பிட்டி பிரதேச சபைத் தலைவர் பயணித்த மோட்டார் வாகனம் மீது நேற்று (16) இரவு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மதுரங்குளிய விருதோடை பகுதியில் வைத்து இனந்தெரியாத குழுவினர் மேற்கொண்ட தாக்குதலில் வாகனத்திற்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், இதன் போது பிரதேச சபைத் தலைவரையும் தாக்கியுள்ளதாக மதுரங்குளிய பொலிஸார் தெரிவித்தனர்.
தேசிய மக்கள் சக்தி கட்சியில் இருந்து கற்பிட்டி பிரதேச சபைக்கு இந்த முறை தேர்ந்தெடுக்கப்பட்ட அப்துல் சத்தார் முகமது ரிக்காஸ் மேலும் சிலருடன், புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முகமது பைசலின் வீட்டிற்குச் சென்றிருந்தனர்.
அவர்கள் விருதோடை வழியாக நுரைச்சோலைக்குத் திரும்பிச் சென்று கொண்டிருந்தபோது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.