yarlathirady.com

பலாலி வீதி இரவு 7.00 மணி வரை திறந்திருக்கும்.!

[2025-06-18 13:30:09] Views:[158]

யாழ்ப்பாணம் பலாலி வீதி போக்குவரத்திற்காக இரவு ஏழு மணி வரை திறக்கப்பட்டு இருக்கும் என தேசிய மக்கள் சக்தியின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் நடைப்பெற்ற பாதுகாப்பு அமைச்சின் கூட்டத்தில் தான் கலந்து கொண்டிருந்த வேளை, ஜனாதிபதியிடம் முன் வைத்த கோரிக்கைக்கு அமைவாக வீதி இரவு 07 மணி வரையில் திறந்திருக்கும் என தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் பலாலி வீதியானது வசாவிளான் சந்தியில் இருந்து பருத்தித்துறை – பொன்னாலை வீதி வரையிலான சுமார் 2 கிலோ மீற்றர் தூரம் பலாலி உயர் பாதுகாப்பு வலயத்தினுள் காணப்பட்ட நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் குறித்த வீதியானது காலை 6.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை மக்களின் போக்குவரத்திற்காக திறந்து விடப்பட்டது.

இந்நிலையில் குறித்த வீதியின் ஊடாக வேலைகளுக்கு சென்று வருபவர்கள் மாலை 5.00 மணிக்கு பாதை பூட்டப்படுவதால் பலத்த சிரமங்களுக்கு மத்தியில் மாற்று பாதை ஊடாக பயணித்து வந்தனர்.

இந்நிலையிலையே ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற பாதுகாப்பு அமைச்சின் கூட்டத்தில் வேலைக்கு போய் வருவோரின் நலன் கருத்து வீதியினை இரவு 7.00 மணி வரைக்கும் திறக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் கோரிக்கையை முன் வைத்தார்.

அதனை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி குறித்த வீதியினை இரவு 7.00 மணி வரையில் திறக்குமாறு இராணுவத்தினருக்கு பணித்துள்ளார் என தெரிவித்தார்.


சினிமாசெய்திகள்
மெர்சல் படத்தில் விஜய் மகனாக நடித்த சிறுவன்
2025-07-04 19:24:31
இதோ அவரின் புகைப்படம்.
நடிகர் மம்மூட்டிக்கு கிடைத்த கௌரவம்
2025-07-03 13:14:12
அவர் தற்போதும் இளம் ஹீரோக்களுக்கு ஈடு கொடுக்கும் வகையில் படங்கள் நடித்து வருகிறார்.
விஜய் ஆண்டனியின் மார்கன் திரைப்படம்
2025-07-02 19:31:57
கடந்த ஜுன் 27ம் தேதி வெளியான இப்படம் கிரைம் த்ரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ளது.
குபேரா திரைப்பட திரைவிமர்சனம்...
2025-06-22 11:03:19
இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா, ஜிம் சர்ப் ஆகியோர் இணைந்து நடித்து இன்று வெளிவந்துள்ள குபேரா திரைப்பட திரைவிமர்சனம்.
ஜாக்கி சானுடன் நடிக்கும் சிம்பு.! விரைவில் அறிவிப்பு:
2025-05-29 20:42:27
ஆக்ஷனில் பல சாதனைகளை படைத்த நடிகர் ஜாக்கி சான் உடன் இணைந்து சிம்பு நடிக்கப்போவதாக கூறப்படுகிறது. விரைவில் இதற்கான அறிவிப்பையும் எதிர்பார்க்கலாம் என்கின்றனர்.
விஜய் ஆண்டனியின் 26 வது பட மாஸ் அப்டேட்
2025-05-18 10:50:19
ஜோஷுவா சேதுராமன் இயக்கும் இந்தப் படத்தினை விஜய் ஆண்டனியே தயாரிக்கிறார்.