yarlathirady.com

கண்ணிவெடி அகற்றும் பணியாளர்களின் தியாகத்தாலேயே மக்களின் மீள்குடியமர்வு சாத்தியமாகியிருக்கின்றது:

[2025-06-19 12:42:47] Views:[95]

மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் பணியாளர்களின் தியாகத்தாலேயே பல இடங்களில் மக்களின் மீள்குடியமர்வு வெற்றிகரமாக சாத்தியமாகியிருக்கின்றது. அவர்களின் தியாகத்துக்கு மதிப்பளித்துப் பாராட்டுகின்றேன் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார்.

முகமாலை வடக்கு பிரதேச முன்னரங்கப் பகுதிகளில் ஹலோ ட்ரஸ் நிறுவனத்தால் முன்னெடுக்கப்பட்ட மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் பணியின் நிறைவும், மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்ட பணியாளர்களின் கௌரவிப்பும் முகமாலையில் நேற்று (18.06.2025)புதன்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட ஆளுநர் தனது உரையில்;

கிளிநொச்சி மாவட்டத்தின் மேலதிக மாவட்டச் செயலராக 2003ஆம் ஆண்டு இணைந்துகொண்டதிலிருந்து மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் நிறுவனங்களுடன் இணைந்து நான் பணியாற்றியிருக்கின்றேன். அவர்களுடன் இணைந்து பணியாற்றியதை பெருமையாகக்கருதுகின்றேன். தங்கள் உயிரை துச்சமாக மதித்து இந்தப் பணியில் அவர்கள் ஈடுபட்டிருக்கின்றார்கள்.

முகமாலை பிரதேசம் கடந்த காலத்தில் போரின் எச்சங்களை வைத்திருந்தது. மக்களின் மீள்குடியமர்வுக்கு அது தடையை ஏற்படுத்தியது. இன்று அது மக்களுக்கு பயனுள்ள ஒன்றாக வெற்றிகரமாக மாற்றியமைக்கப்பட்டிருக்கின்றது.

ஹலோ ட்ரஸ் நிறுவனம் மகத்தான சவால்களை எதிர்கொண்டு மேற்கொண்ட அவர்களின் கடினமான முயற்சிகள், நமது மக்களின் பாதுகாப்பான மீள்குடியேற்றத்துக்கும் அவர்களின் வாழ்வாதாரங்களின் மறுமலர்ச்சிக்கும் வழி வகுக்கின்றன.

இந்த நிலத்தை தரிசாக வைத்திருக்கும் மற்றும் அதன் மக்களை காத்திருக்க வைக்கும் மறைக்கப்பட்ட அச்சுறுத்தல்களை அகற்ற ஹலோ ட்ரஸ், பெரும்பாலும் ஆபத்தான சூழ்நிலைகளில் அயராது உழைத்து வருகிறது.

இது வெறும் நிலத்தை சுத்தம் செய்வது பற்றியது மட்டுமல்ல, நம்பிக்கையை கட்டியெழுப்புவது பற்றியது. இது குடும்பங்களுக்கு தங்கள் வீடுகளை மீண்டும் கட்டியெழுப்பவும், தங்கள் வயல்களை மீண்டும் பயிரிடவும், தங்கள் குழந்தைகளை பயமின்றி விளையாட அனுமதிக்கவும் நம்பிக்கையை அளிப்பதாகும்.

மனிதாபிமான கண்ணிவெடி அகற்றுபவர்களின் சாதனைகளுக்கு நாங்கள் உங்களை வாழ்த்துகிறோம். இந்தப் பணியில் ஈடுபட்டுள்ள அனைத்து மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் நிறுவனங்கள், அமைப்புக்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.

மேலும் எதிர்காலத்தில், இலங்கை முழுவதும் கண்ணிவெடிகளின் அச்சுறுத்தலில் இருந்து விடுபடும் நாளை எதிர்பார்த்துக்காத்திருக்கின்றோம். உங்கள் சேவை நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாகும், அதற்காக நாங்கள் என்றென்றும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம், என்றார் ஆளுநர்.

இந்த நிகழ்வில் ஆளுநர் உள்ளிட்ட விருந்தினர்கள் பாண்ட் வாத்திய அணிவகுப்புடன் வரவேற்கப்பட்டு, ஹலோ ட்ரஸ் நிறுவனத்தால் முகமாலையில் முன்னெடுக்கப்பட்ட செயற்றிட்டம் தொடர்பான விளக்கமளிக்கப்பட்டது.

இதன் பின்னர் பணியாளர்கள் ஆளுநர் உள்ளிட்ட விருந்தினர்களால் கௌரவிக்கப்பட்டனர்.

சிற்றிகழ்வில் கிளிநொச்சி மாவட்டச் செயலர் சு.முரளிதரன், யாழ். மாவட்ட மேலதிக மாவட்டச் செயலர் க.சிறிமோகன், பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் த.ஜெயசீலன், கனேடிய துணைத்தூதுவர் உள்ளிட்ட பலர் விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.


சினிமாசெய்திகள்
மெர்சல் படத்தில் விஜய் மகனாக நடித்த சிறுவன்
2025-07-04 19:24:31
இதோ அவரின் புகைப்படம்.
நடிகர் மம்மூட்டிக்கு கிடைத்த கௌரவம்
2025-07-03 13:14:12
அவர் தற்போதும் இளம் ஹீரோக்களுக்கு ஈடு கொடுக்கும் வகையில் படங்கள் நடித்து வருகிறார்.
விஜய் ஆண்டனியின் மார்கன் திரைப்படம்
2025-07-02 19:31:57
கடந்த ஜுன் 27ம் தேதி வெளியான இப்படம் கிரைம் த்ரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ளது.
குபேரா திரைப்பட திரைவிமர்சனம்...
2025-06-22 11:03:19
இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா, ஜிம் சர்ப் ஆகியோர் இணைந்து நடித்து இன்று வெளிவந்துள்ள குபேரா திரைப்பட திரைவிமர்சனம்.
ஜாக்கி சானுடன் நடிக்கும் சிம்பு.! விரைவில் அறிவிப்பு:
2025-05-29 20:42:27
ஆக்ஷனில் பல சாதனைகளை படைத்த நடிகர் ஜாக்கி சான் உடன் இணைந்து சிம்பு நடிக்கப்போவதாக கூறப்படுகிறது. விரைவில் இதற்கான அறிவிப்பையும் எதிர்பார்க்கலாம் என்கின்றனர்.
விஜய் ஆண்டனியின் 26 வது பட மாஸ் அப்டேட்
2025-05-18 10:50:19
ஜோஷுவா சேதுராமன் இயக்கும் இந்தப் படத்தினை விஜய் ஆண்டனியே தயாரிக்கிறார்.