கஞ்சா கலந்த மாவா பாக்குடன் இளைஞர் கைது.!
[2025-06-20 10:15:41] Views:[91] யாழ்ப்பாணத்தில் கஞ்சா கலந்த மாவா பாக்குடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குருநகர் வைத்தியசாலைக்கு முன்பாக மாவா பாக்குடன் இளைஞன் ஒருவர் சந்தேகத்திற்கு இடமான முறையில் சுற்றி திரிவதாக பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் குறித்த இளைஞனை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது இளைஞனின் உடைமையில் இருந்து 100 கிராம் மாவா பாக்கு மீட்கப்பட்டுள்ளது.
பொலிஸார் கைது செய்யப்பட்ட இளைஞனை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் நிலையில் இன்று நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.