yarlathirady.com

மூன்று ஜாம்பவான்கள் இல்லாமல் டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ள இந்திய அணி.!

[2025-06-20 12:28:39] Views:[95]

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளன. சுமார் 14 ஆண்டுகளுக்குப் பிறகு மூன்று ஜாம்பவான் வீரர்கள் இல்லாத இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இது இந்திய டெஸ்ட் அணியின் புதிய சகாப்தத்தின் துவக்கமாக அமைந்திருப்பதையே சுட்டிக்காட்டுகிறது.

ரோஹித் சர்மா, விராட் கோலி மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகிய மூவரில் ஒருவராவது இந்த 14 ஆண்டுகளில் இந்திய அணி விளையாடிய டெஸ்ட் போட்டிகளில் இடம் பெற்று இருந்தனர்.

2011 ஆம் ஆண்டு ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டிதான் கடைசியாக விராட் கோலி, ரோஹித் சர்மா அல்லது ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகிய மூவரில் ஒருவரும் விளையாடாத போட்டியாக இருந்தது.

அதன் பிறகு இந்திய அணி விளையாடிய அனைத்து டெஸ்ட் போட்டிகளிலும் இவர்கள் மூவரில் ஒருவராவது பிளேயிங் லெவனில் இடம் பிடித்து ஆடி இருக்கின்றனர்.

2021 ஆம் ஆண்டு நியூசிலாந்து அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியின் போது விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா விளையாடவில்லை. அந்தக் போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின் இடம் பெற்று விளையாடி இருந்தார்.

அந்த வகையில், சுமார் 14 ஆண்டுகள் கழித்து இந்திய டெஸ்ட் அணியின் மூன்று ஜாம்பவான்களான விராட் கோலி, ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரோஹித் சர்மா ஆகிய மூவரும் இல்லாத ஒரு இந்திய அணி இங்கிலாந்தில் விளையாட உள்ளது. இது நிச்சயம் இந்திய அணிக்கு மிகப்பெரிய சவாலாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.

மேலும், இளம் வயதே ஆன சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி களம் இறங்க உள்ளது. இதன் மூலம் இந்திய டெஸ்ட் அணி ஒரு புதிய சகாப்தத்தில் காலடி எடுத்து வைக்கிறது. மூத்த வீரர்கள் இல்லாத இந்திய அணி சாதிக்குமா? அல்லது தடுமாறுமா? என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.


சினிமாசெய்திகள்
மெர்சல் படத்தில் விஜய் மகனாக நடித்த சிறுவன்
2025-07-04 19:24:31
இதோ அவரின் புகைப்படம்.
நடிகர் மம்மூட்டிக்கு கிடைத்த கௌரவம்
2025-07-03 13:14:12
அவர் தற்போதும் இளம் ஹீரோக்களுக்கு ஈடு கொடுக்கும் வகையில் படங்கள் நடித்து வருகிறார்.
விஜய் ஆண்டனியின் மார்கன் திரைப்படம்
2025-07-02 19:31:57
கடந்த ஜுன் 27ம் தேதி வெளியான இப்படம் கிரைம் த்ரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ளது.
குபேரா திரைப்பட திரைவிமர்சனம்...
2025-06-22 11:03:19
இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா, ஜிம் சர்ப் ஆகியோர் இணைந்து நடித்து இன்று வெளிவந்துள்ள குபேரா திரைப்பட திரைவிமர்சனம்.
ஜாக்கி சானுடன் நடிக்கும் சிம்பு.! விரைவில் அறிவிப்பு:
2025-05-29 20:42:27
ஆக்ஷனில் பல சாதனைகளை படைத்த நடிகர் ஜாக்கி சான் உடன் இணைந்து சிம்பு நடிக்கப்போவதாக கூறப்படுகிறது. விரைவில் இதற்கான அறிவிப்பையும் எதிர்பார்க்கலாம் என்கின்றனர்.
விஜய் ஆண்டனியின் 26 வது பட மாஸ் அப்டேட்
2025-05-18 10:50:19
ஜோஷுவா சேதுராமன் இயக்கும் இந்தப் படத்தினை விஜய் ஆண்டனியே தயாரிக்கிறார்.