யாழில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் உட்பட இருவர் கைது.!
[2025-06-22 07:00:07] Views:[84] யாழ்ப்பாணம் நாவாந்துறை பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் ஒருவரும் இளைஞர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் நேற்று (21) குறித்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது, சந்தேகநபர்களிடமிருந்து 440 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களை யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.