இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கு விடுத்துள்ள விசேட அறிவிப்பு...!
[2025-06-23 10:53:11] Views:[105] இஸ்ரேலின் தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, இலங்கைக்கு பயணிக்க விரும்புவோருக்கு இந்தியா வாய்ப்பை வழங்கியுள்ளது.
அதன்படி, இலங்கையர்கள் ஜோர்தானின் அம்மானில் இருந்து இந்தியாவின் புது டில்லிக்கு செல்லும் விமானங்களில் பயணிக்க இந்திய அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளது.
இந்த விமானங்கள் மூலம் இலங்கைக்கு பயணிக்க விரும்புவோர் தூதரகத்திற்கு வந்து பதிவு செய்ய வேண்டும் என்று இஸ்ரேலில் உள்ள இலங்கை தூதரகம் அறிவித்துள்ளது.
அதன்படி, டெல் அவிவிலிருந்து ஜோர்தானின் அம்மானுக்கும், அம்மானில் இருந்து புது டில்லிக்கும் போக்குவரத்து வசதிகள் இலவசமாக வழங்கப்படும், அதே நேரத்தில் புது தில்லிக்கும் கொழும்புக்கும் இடையிலான விமானத்திற்கான டிக்கெட்டுகளை பணம் செலுத்தி வாங்க வேண்டும்.
செல்ல விரும்புவோர் ஜூன் 23 மற்றும் 24, 2025 அன்று மட்டுமே பதிவு செய்ய வேண்டும் என்று இஸ்ரேலில் உள்ள இலங்கை தூதரகம் அறிவித்துள்ளது.