சிறைக்கைதியை மோசடியாக விடுவித்த அனுராதபுரம் சிறைச்சாலை அத்தியட்சகருக்கு பிணை!
[2025-06-24 10:47:56] Views:[86] ஜனாதிபதி பொதுமன்னிப்பை பயன்படுத்தி சிறைக்கைதியொருவரை மோசடியாக விடுவித்த குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்ட அனுராதபுர சிறைச்சாலை அத்தியட்சகருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
கடந்த வெசாக் தினத்தை முன்னிட்டு வழங்கப்பட்ட ஜனாதிபதி பொதுமன்னிப்பை முறைகேடான வகையில் பயன்படுத்தி அனுராதபுரம் சிறைச்சாலையில் இருந்த கைதியொருவரை மோசடியான முறையில் விடுவித்த குற்றச்சாட்டில் அனுராதபுரம் சிறைச்சாலை அத்தியட்சகர் கைது செய்யப்பட்டார்.
விசாரணைகளின் பின்னர் அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் அவரை முற்படுத்திய போது 2025.06.23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்நிலையில் நேற்று (23) குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது அனுராதபுரம் சிறைச்சாலை அத்தியட்சகரை தலா ஐந்து இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அத்துடன் வழக்கின் மேலதிக விசாரணை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 04ம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.