போர் நிறுத்தம் அமுலுக்கு வரவில்லை - ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர்...
[2025-06-24 11:51:29] Views:[117] இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து ஈரானுடன் போர் நடத்தி வரும் நிலையில், போர் நிறுத்தத்துக்கு ஈரான் ஒப்புதல் அளித்துள்ளதாக ட்ரம்ப் அறிவித்ததை ஈரான் நிராகரித்துள்ளது.
இந்த சூழலில், ''இஸ்ரேல், ஈரான் போர் நிறுத்தத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது. 6 மணி நேரத்திற்கு பிறகு ஈரானும், 12 மணி நேரத்திற்கு பிறகு இஸ்ரேலும் போர் நிறுத்தத்தை அமுல்படுத்தும். 24 மணி நேரத்தில் போர் நிறுத்தம் முழுமையாக அமுலுக்கு வரும்'' என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
இந்நிலையில், போர் நிறுத்தம் தொடர்பான அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் அறிவிப்பை ஈரான் நிராகரித்துள்ளது.
''இஸ்ரேலுடன் போர் நிறுத்தம் அமுலுக்கு வரவில்லை. போர் நிறுத்தம் தொடர்பாகவோ, இராணுவ நடவடிக்கைகள் தொடர்பாகவோ எந்த ஒப்பந்தமும் மேற்கொள்ளப்படவில்லை. இஸ்ரேல் மீதான தாக்குதல் தொடர்கிறது'' என ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அராக்சி தெரிவித்துள்ளார்.