yarlathirady.com

கட்டாரிலுள்ள இலங்கையர்களுக்கான அவசர அறிவிப்பு..!

[2025-06-24 12:25:59] Views:[101]

கட்டாரில் உள்ள இலங்கையர்கள் தாங்கள் வசிக்கும் இடங்களில் பாதுகாப்பாக இருக்குமாறு கட்டாரில் உள்ள இலங்கை தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

இஸ்ரேல் - ஈரான் தாக்குதல் அதிகரித்து வரும் வேளையில் நேற்று கட்டாரிலுள்ள அமெரிக்க இராணுவ தளத்தின் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதலை நடத்தியது.

ஈரான் மீது அமெரிக்கா மேற்கொண்ட தாக்குதலுக்குப் பதிலடியாகவே கட்டார் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரான் பகிரங்கமாக தெரிவித்திருந்தது.

இரு தரப்புக்கும் இடையிலான பதிலடித் தாக்குதல்கள் மோசமடைந்து வரும் நிலையில் மத்திய கிழக்கு நாடுகளில் பதற்ற நிலை உருவாகியுள்ளது.

இந்த நிலையிலேயே கட்டாரிலுள்ள இலங்கையர்களுக்கு இலங்கை அரசாங்கம் மற்றும் கட்டாரிலுள்ள இலங்கைத் தூதரகம் அவசர அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இலங்கையர்கள் பாதுகாப்பாக இருக்குமாறும் அறிவுறுத்தல்களைக் கட்டாயமாகப் பின்பற்றுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் ஏதேனும் அவசரநிலை ஏற்பட்டால், +9471182587 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் என்றும் கட்டாரில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.


சினிமாசெய்திகள்
மெர்சல் படத்தில் விஜய் மகனாக நடித்த சிறுவன்
2025-07-04 19:24:31
இதோ அவரின் புகைப்படம்.
நடிகர் மம்மூட்டிக்கு கிடைத்த கௌரவம்
2025-07-03 13:14:12
அவர் தற்போதும் இளம் ஹீரோக்களுக்கு ஈடு கொடுக்கும் வகையில் படங்கள் நடித்து வருகிறார்.
விஜய் ஆண்டனியின் மார்கன் திரைப்படம்
2025-07-02 19:31:57
கடந்த ஜுன் 27ம் தேதி வெளியான இப்படம் கிரைம் த்ரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ளது.
குபேரா திரைப்பட திரைவிமர்சனம்...
2025-06-22 11:03:19
இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா, ஜிம் சர்ப் ஆகியோர் இணைந்து நடித்து இன்று வெளிவந்துள்ள குபேரா திரைப்பட திரைவிமர்சனம்.
ஜாக்கி சானுடன் நடிக்கும் சிம்பு.! விரைவில் அறிவிப்பு:
2025-05-29 20:42:27
ஆக்ஷனில் பல சாதனைகளை படைத்த நடிகர் ஜாக்கி சான் உடன் இணைந்து சிம்பு நடிக்கப்போவதாக கூறப்படுகிறது. விரைவில் இதற்கான அறிவிப்பையும் எதிர்பார்க்கலாம் என்கின்றனர்.
விஜய் ஆண்டனியின் 26 வது பட மாஸ் அப்டேட்
2025-05-18 10:50:19
ஜோஷுவா சேதுராமன் இயக்கும் இந்தப் படத்தினை விஜய் ஆண்டனியே தயாரிக்கிறார்.