பகிடிவதை - ஒலுவில் பல்கலைக்கழக மாணவர்கள் 22 பேர் இடைநீக்கம்.!
[2025-06-25 11:00:04] Views:[93] தென் கிழக்குப் (ஒலுவில்) பல்கலைக்கழக பொறியியல் பீட முதலாமாண்டு மாணவர்களை பகிடிவதை செய்த இரண்டாம் ஆண்டு மாணவர்கள் 22 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பொறியியல் பீடத்தைச் சேர்ந்த இரண்டாம் ஆண்டு மாணவர்கள் குழு ஒன்று முதலாம் ஆண்டு மாணவர்களை பகிடிவதை செய்துள்ளது. சம்பவம் குறித்து முறையான விசாரணைகளை நடத்த பல்கலைக்கழக பேராசிரியர்கள் கொண்ட ஒரு சிறப்புக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.
விசாரணையின் அடிப்படையில் கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதேவேளை இலங்கை தென் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மூன்றாம் ஆண்டில் பயிலும் மாணவர்கள் குழுவொன்று முதலாமாண்டு மாணவர்களின் அறைகளுக்குள் நுழைந்து முழந்தாளிடச் செய்து கடுமையாக துன்புறுத்தி தாக்கும் வகையிலான காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.