yarlathirady.com

மதுபோதையில் மகளை கத்தியால் குத்திய தந்தை!!

[2025-06-25 19:21:16] Views:[102]

தந்தை ஒருவர் மதுபோதையில் தனது மகளை கத்தியால் குத்திய சம்பவம் ஒன்று இரத்தினபுரியில் இடம்பெற்றுள்ளது.

கடந்த 22 ஆம் திகதி இரவு இரத்தினபுரி, படஹேன பிரதேசத்தில் இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் 25 வயதுடைய மகள் இவ்வாறு காயமடைந்துள்ளதாக அயகம பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது;

கடந்த 22 ஆம் திகதி இரவு காயமடைந்த 25 வயதுடைய மகள் தனது கணவர் மற்றும் ஒரு வயது மகனுடன் படஹேன பிரதேசத்தில் உள்ள தனது தந்தை மற்றும் பாட்டியின் வீட்டிற்குச் சென்றுள்ளார்.

இந்நிலையில் தந்தை மதுபோதையில் வீட்டிற்குச் வந்துள்ளார் இதன்போது தந்தைக்கும் பாட்டிக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறின் போது தந்தை, பாட்டியை கத்தியால் குத்த முயன்றுள்ளார்.

இதனை அவதானித்த மகள், தனது பாட்டியை காப்பாற்ற முயன்ற போது தந்தையின் கத்திக்குத்துக்கு இலக்காகி காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக ஹொரணை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து சந்தேக நபரான தந்தை அயகம பிரதேசத்தில் உள்ள பெண் ஒருவரின் வீட்டில் தலைமறைவாக இருந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை அயகம பொலிஸாரால் அவரை கைது செய்துள்ளார்.


சினிமாசெய்திகள்
மெர்சல் படத்தில் விஜய் மகனாக நடித்த சிறுவன்
2025-07-04 19:24:31
இதோ அவரின் புகைப்படம்.
நடிகர் மம்மூட்டிக்கு கிடைத்த கௌரவம்
2025-07-03 13:14:12
அவர் தற்போதும் இளம் ஹீரோக்களுக்கு ஈடு கொடுக்கும் வகையில் படங்கள் நடித்து வருகிறார்.
விஜய் ஆண்டனியின் மார்கன் திரைப்படம்
2025-07-02 19:31:57
கடந்த ஜுன் 27ம் தேதி வெளியான இப்படம் கிரைம் த்ரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ளது.
குபேரா திரைப்பட திரைவிமர்சனம்...
2025-06-22 11:03:19
இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா, ஜிம் சர்ப் ஆகியோர் இணைந்து நடித்து இன்று வெளிவந்துள்ள குபேரா திரைப்பட திரைவிமர்சனம்.
ஜாக்கி சானுடன் நடிக்கும் சிம்பு.! விரைவில் அறிவிப்பு:
2025-05-29 20:42:27
ஆக்ஷனில் பல சாதனைகளை படைத்த நடிகர் ஜாக்கி சான் உடன் இணைந்து சிம்பு நடிக்கப்போவதாக கூறப்படுகிறது. விரைவில் இதற்கான அறிவிப்பையும் எதிர்பார்க்கலாம் என்கின்றனர்.
விஜய் ஆண்டனியின் 26 வது பட மாஸ் அப்டேட்
2025-05-18 10:50:19
ஜோஷுவா சேதுராமன் இயக்கும் இந்தப் படத்தினை விஜய் ஆண்டனியே தயாரிக்கிறார்.