நள்ளிரவு முதல் அமுலுக்கு வந்தது எரிபொருட்களின் விலை அதிகரிப்பு..!
[2025-07-01 11:05:26] Views:[209] நேற்று (30) நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகளில் மாற்றம் செய்யப்படுவதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
அந்தவகையில் லங்கா ஒட்டோ டீசல் ஒரு லிட்டரின் விலை 15 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ள நிலையில், அதன் புதிய விலை 289 ரூபாவாகும்.
மண்ணெண்ணெய் ஒரு லிட்டரின் விலை 7 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ள நிலையில், அதன் புதிய விலை 185 ரூபாவாகும்.
92 ஒக்டேன் பெற்றோல் ஒரு லிட்டரின் விலை 12 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ள நிலையில், அதன் புதிய விலை 305 ரூபாவாகும்.
இதேவேளை, இதேவேளை, லங்கா சுப்பர் டீசல் 4 ஸ்டார் யூரோ 4 லீற்றர் ஒன்றின் விலையிலும் (325 ரூபா), லங்கா பெற்றோல் 95 ஒக்டேன் யூரோ 4 லீற்றர் ஒன்றின் விலையிலும் (341 ரூபா), மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை எனவும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் விலைத் திருத்தத்திற்கு அமைய லங்கா ஐஓசி நிறுவனமும் எரிபொருள் விலைகளை திருத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.