yarlathirady.com

அஸ்வெசும இரண்டாம் கட்ட கொடுப்பனவு

[2025-07-03 10:46:02] Views:[72]

அஸ்வெசும இரண்டாம் கட்டத்தின் கீழ், கொடுப்பனவுகளைப் பெறத் தகுதியுடையவர்களின் பட்டியலை நலன்புரி நன்மைகள் சபை வௌியிட்டுள்ளது. இந்தப் பட்டியல் நலன்புரி நன்மைகள் சபையின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் (www.wbb.gov.lk) வெளியிடப்பட்டுள்ளது.


கொடுப்பனவுகளைப் பெறத் தகுதியுடையவர்களின் பட்டியல் அனைத்து பிரதேச செயலக அலுவலகங்களின் அறிவிப்பு பலகைகளிலும், கிராம உத்தியோகத்தர் மற்றும் விடயத்திற்கு பொறுப்பான அதிகாரிகளின் காரியாலய அறிவிப்பு பலகைகளிலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.தகவல் சேகரிப்பின் இரண்டாம் கட்டத்தின் போது வழங்கப்பட்ட தகவல்களில் பிழை அல்லது முரண்பாடு இருப்பதாக கருதும் விண்ணப்பதாரர்கள் மற்றும் கொடுப்பனவுகளைப் பெற தகுதியான பட்டியலில் பெயர் உள்ளடக்கப்படாத நபர்கள் ஆகியோர் இதற்கான மேல்முறையீட்டைச் சமர்ப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேல்முறையீட்டாளர்கள்/ ஆட்சேபனையாளர்கள் www.wbb.gov.lk என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு பிரவேசித்து, பின்னர் தங்களது மேல்முறையீடுகள்/ ஆட்சேபனைகளை இணையவழியாகவும் சமர்ப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


சினிமாசெய்திகள்
மெர்சல் படத்தில் விஜய் மகனாக நடித்த சிறுவன்
2025-07-04 19:24:31
இதோ அவரின் புகைப்படம்.
நடிகர் மம்மூட்டிக்கு கிடைத்த கௌரவம்
2025-07-03 13:14:12
அவர் தற்போதும் இளம் ஹீரோக்களுக்கு ஈடு கொடுக்கும் வகையில் படங்கள் நடித்து வருகிறார்.
விஜய் ஆண்டனியின் மார்கன் திரைப்படம்
2025-07-02 19:31:57
கடந்த ஜுன் 27ம் தேதி வெளியான இப்படம் கிரைம் த்ரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ளது.
குபேரா திரைப்பட திரைவிமர்சனம்...
2025-06-22 11:03:19
இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா, ஜிம் சர்ப் ஆகியோர் இணைந்து நடித்து இன்று வெளிவந்துள்ள குபேரா திரைப்பட திரைவிமர்சனம்.
ஜாக்கி சானுடன் நடிக்கும் சிம்பு.! விரைவில் அறிவிப்பு:
2025-05-29 20:42:27
ஆக்ஷனில் பல சாதனைகளை படைத்த நடிகர் ஜாக்கி சான் உடன் இணைந்து சிம்பு நடிக்கப்போவதாக கூறப்படுகிறது. விரைவில் இதற்கான அறிவிப்பையும் எதிர்பார்க்கலாம் என்கின்றனர்.
விஜய் ஆண்டனியின் 26 வது பட மாஸ் அப்டேட்
2025-05-18 10:50:19
ஜோஷுவா சேதுராமன் இயக்கும் இந்தப் படத்தினை விஜய் ஆண்டனியே தயாரிக்கிறார்.