மீமூரேவுக்கு வருவதை தவிர்க்குமாறு அறிவுறுத்தல்
[2025-07-05 12:26:47] Views:[47] பொழுதுபோக்கு பயணங்கள் மற்றும் பிற நோக்கங்களுக்காக மீமூரேவுக்கு வருவதை மறு அறிவிப்பு வரும் வரை தவிர்க்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மீமுரே சாலையில் உள்ள கைகாவல பாலத்தின் மீது வாகனப் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டதே இதற்குக் காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாலத்தில் புதுப்பித்தல் பணியின் போது ஏற்பட்ட அவசர சூழ்நிலை காரணமாக, பாலத்தின் ஊடான போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.