பயங்கரவாத அச்சுறுத்தல் காரணமாக இந்திய விமான நிலையங்களில் உயர் பாதுகாப்பு...!
[2025-08-06 18:57:45] Views:[78] இந்தியாவின் முக்கிய பகுதிகளில் பயங்கரவாத அச்சுறுத்தல் குறித்து புலனாய்வு துறையின் எச்சரிக்கையைத் தொடர்ந்து அனைத்து விமான நிலையங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
செப்டம்பர் 22 முதல் அக்டோபர் 2, 2025 வரை பயங்கரவாத தாக்குதலுக்கு வாய்ப்புள்ளதாக உளவுத்துறை வெளியிட்ட கவல்களைக் கருத்தில் கொண்டு, சிவில் விமானப் பாதுகாப்பு பணியகம் இந்த உயர்தர பாதுகாப்பு நடவடிக்கைகளை மேட்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நடவடிக்கையின் கீழ், விமான நிலையங்கள், ஓடுபாதைகள், ஹெலிகாப்டர் தளங்கள்,மற்றும் பயிற்சி நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் அதி உயர் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.