இனி வாட்சப் இல்லாதவர்களிடமும் உரையாட கூடிய புதிய அம்சம்.
[2025-08-07 19:30:53] Views:[86] வாட்சப் செயலி இல்லாதவர்களுடனும் உரையாடும் வகையில் புதிய அம்சம் நடைமுறைக்கு வர உள்ளது.
- மெட்டா நிறுவனத்தின் வாட்சப் செயலி பயனர்களை கவர்வதற்காக அவ்வப்போது புதிதாக பல்வேறு அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகிறது.
- அதே போல், தற்போது வாட்சப் செயலி பயன்படுத்தாதவர்களுடனும் உரையாடும் வகையில் விருந்தினர் அரட்டை(Guest Chat) என்னும் புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
- இந்த புதிய அம்சத்தில், வாட்சப் செயலியை பயன்படுத்தாதவர்களுக்கு ஒரு லிங்க் அனுப்பி அழைப்பு விடுக்க முடியும்.
- இந்த லிங்க்கை, SMS ஈமெயில் அல்லது சமூகவலைத்தளங்கள் மூலம் அனுப்ப முடியும்.
- இந்த லிங்கை கிளிக் செய்தால், பிரௌசரில் தற்காலிக பக்கம் ஒன்று திறக்கும். அதில் வாட்சப் செயலியை டவுன்லோட் செய்யாமலே உரையாட முடியும்.
- ஆனால், இதில் புகைப்படம், வீடியோ, குரல்பதிவு உள்ளிட்ட எந்த கோப்புகளையும் அனுப்ப முடியாது. மேலும், குரல் அல்லது வீடியோ அழைப்புகளை மேற்கொள்ள முடியாது.
- இந்த உரையாடல் end-to-end encryption செய்யப்பட்டுள்ளதால், இதனை வேறு யாரும் அணுக முடியாது.
- தற்போது இந்த அம்சம் உருவாக்கத்தில் உள்ள நிலையில், எப்போது பயன்பாட்டிற்கு வரும் என்ற அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.