யாழ்.பொது நூலகத்தில் புதிய வேலைத்திட்டத்தை தொடக்கிவைத்த ஜனாதிபதி.
[2025-09-01 21:49:10] Views:[82] ஐனாதிபதியால் யாழ்ப்பாணம் பொதுநூலகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் மற்றும் எண்ணிமப்படுத்தல் செயற்றிட்டமும் தொடக்கி வைக்கப்பட்டது.
இதன் மூலம் உலகில் எங்கும் வசிப்பவருக்கு யாழ்.பொது நூலகத்தின் புத்தகங்களை இணையத்தளத்தில் ஊடாகப் பயன்படுத்தும் சந்தர்ப்பம் கிடைக்கும்.
2025ஆம் அந்நடுக்கன் வரவு செலவுத் திட்டத்தில் யாழ்ப்பாணம் பொதுநூலக மேம்பாட்டுக்காக விசேடமாக 100 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அதனை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு யாழ்ப்பாணம் பொதுநூலகத்தில் இன்று நடைபெற்றது.
இந்த நிகழ்வில் ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினர், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் மற்றும் யாழ். மாநகர சபையின் முதல்வர் மதிவதனி விவேகானந்தராஜா ஆகியோரால்இந்நிகழ்வில் கலந்துக்கொண்டனர்.