yarlathirady.com

நேபாளத்தில் 26 சமூக ஊடகங்களுக்கு தடைவிதிப்பு..!

[2025-09-05 20:31:16] Views:[59]

நேபாளத்தில் 26 சமூக ஊடகங்களுக்கு அந்நாட்டு அரசுதடை விதித்து உத்தரவிட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நேபாளத்தில் உள்நாட்டு விதிமுறைகளின்படி பதிவு செய்யத் தவறியதற்காக, பேஸ்புக், எக்ஸ், இன்ஸ்டா மற்றும் யூடியூப் போன்ற முக்கிய சமூக வலைதளங்களுக்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேபாளத்தில் தங்கள் நிறுவனங்களை பதிவு செய்து, உள்ளூர் தொடர்பு அதிகாரியை நியமிக்க வேண்டுமென பலமுறை சமூக வலைதளங்களுக்கு அரசு அறிவித்திருந்தும் இதற்கு சமூக வலைதள நிறுவனங்கள் எந்த பதிலும் அளிக்காத நிலையில் நேற்றயதினம் 26 சமூக வலைதளங்களுக்கான தடை உத்தரவு அமுலுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிக்டொக் மற்றும் வைபர் உள்ளிட்ட 5 சமூக வலைத்தளங்கள், அரசின் விதிமுறைகளைப் பின்பற்றிப் பதிவு செய்துள்ளதால், அவை தொடர்ந்து நேபாளத்தில் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


சினிமாசெய்திகள்
இட்லி கடை
2025-10-07 12:43:37
நடிகர் தனுஷ் உடைய இட்லி கடை படம்
15 வருடத்தை எட்டியுள்ள ரஜினியின் எந்திரன்
2025-10-02 12:14:05
இந்தப்படம் வெளியாகி 15 வருடங்கள் ஆனதை தொடர்ந்து மக்கள் படம் குறித்து நிறைய பதிவிட்டு வருகிறார்கள்.
மெய்யழகன் படம் வெளிவந்து ஓராண்டு நிறைவு
2025-09-28 12:14:15
இன்றுடன் மெய்யழகன் படம் வெளிவந்து ஓராண்டு நிறைவு ஆகியுள்ளது.
பல்டி படம்
2025-09-28 06:06:18
சாந்தனு, ஷேன் நிகாம் நடித்து வெளிவந்துள்ள.......
இவ்வளவு பெரிய சாதனையை நடிகர் ரோபோ ஷங்கர் படைத்துள்ளாரா!
2025-09-19 10:06:44
இவருடைய மறைவு பெரும் துயரத்தை அனைவருக்கும் கொடுத்துள்ளது.
அடுத்தடுத்து வெளிவரவுள்ள கமல்ஹாசனின் அதிரடி திரைப்படங்கள்.
2025-09-18 19:20:53
தமிழ் திரையுலகில் ‘உலக நாயகன்’ என்ற பெருமையை தக்கவைத்திருக்கும் கமல் ஹாசன், தற்போது மீண்டும் திரைப்பட உலகில் பிஸியாக இருக்கிறார்.