திருகோணமலையில் நிலநடுக்கம் பதிவு...!!
[2025-09-18 19:39:26] Views:[101] இன்றைய தினம் மாலை 4.06 மணியளவில் திருகோணமலை கடல் பகுதியில் ரிக்டர் அளவுகோலில் 3.9 ஆக நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
திருகோணமலைக்கு வடகிழக்கே 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கடலில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.
இன்று மாலை சுமார் 4.06 மணியளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.
மேலும் குறிப்பிட்ட நிலநடுக்கமானது நாட்டில் நிறுவப்பட்ட நான்கு நிலநடுக்கமானிகளாலும் இந்த நிலநடுக்கம் பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.