உடலில் மறைத்து தங்கம் கடத்திய பெண் கைது: யாழ். விமான நிலையத்தில் சம்பவம்.!!
[2025-09-22 11:58:44] Views:[164] யாழ் பலாலி விமான நிலையம் ஊடாக நேற்றய தினம் பெண்ணொருவர் உடலில் மறைத்து தங்கம் கடத்தியுள்ளார்.
கொழும்பை சேர்ந்த பெண்ணொருவரே இவ்வாறு தங்கம் கடத்தியுள்ளமைவிசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த பெண் இந்தியாவில் இருந்து உடலில் மறைத்து தங்கத்தை கொண்டு வந்துள்ளார்.
இந்தநிலையில், யாழ். பலாலி விமான நிலைய அதிகாரிகளின் சோதனையில் ஈடுபட்டபோது இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதன்பின்பு, கடத்தலில் ஈடுபட்ட பெண் கைதுசெய்யப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
இதையடுத்து, அங்கு குறித்த பெண்ணிற்கு சிகிச்சையளிக்கப்பட்டு தங்கம் மீட்டு எடுக்கப்பட்ததாக கூறப்படுகிறது.