மேலதிகமாக 51 வீடுகள் வழங்க நடவடிக்கை!
[2025-10-06 11:09:20] Views:[132] மேலதிகமாக 51 வீடுகள் கிளிநொச்சி மாவட்டத்திற்கு கிடைக்கப்பெற்றுள்ளன. அவற்றை மிக விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் தெரிவித்துள்ளார்.
வளமான நாடு அழகான எதிர்காலம் எனும் தொனிப் பொருளில் கிளிநொச்சி மாவட்டத்தில் மொத்தமாக மூன்று மாத காலப்பகுதியில் 11 வீடுகள் நேற்று உத்தியோபூர்வமாக வழங்கப்பட்டுள்ளது.
நேற்று (05) ளிநொச்சி மாவட்டத்தில் வீடமைப்பு அதிகார சபையினரால் 10 லட்சம் ரூபாய் பெறுமதியான 11 வீடுகள் வீட்டு உரிமையாளர்களிடம் கையளிக்கும் நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.