காங்கேசன்துறை - நாகபட்டினம் இடையிலான கப்பல் போக்குவரத்து சேவை
[2025-10-06 11:18:22] Views:[92] காங்கேசன்துறை - நாகபட்டினம் இடையிலான பயணிகள் கப்பல் சேவையானது வார்த்தில் அனைத்து நாட்களும் இடம்பெறும் என சிவகங்கை கப்பல் நிறுவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
கடந்த தினங்களில் செவ்வாய் தவிர்ந்த ஆறு நாட்களும் குறித்த சேவை இடம்பெற்றுவந்த நிலையில் தீபாவளியை முன்னிட்டு இந்த மாதம் 8ஆம் திகதிமுதல் இந்த மாதம் 28ஆம் திகதி வரை தினமும் கப்பல் சேவை இடம்பெறும் என அவர் தெரிவித்துள்ளார்.