வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலய தீர்த்தோற்சவம்
[2025-10-07 12:29:47] Views:[55] யாழ்.வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலய பெருந்திருவிழாவின் தீர்த்தோற்சவம் வெகு சிறப்பாக இடம்பெற்றது. பிற்பகல் 3 மணியிலிருந்து விசேட பூசைகள் இடம்பெற்று அதனை தொடர்ந்து வசந்த மண்ட பூசை இடம்பெற்றது.
வல்லிபுர ஆழ்வாரின் சமுத்திர தீர்த்த திருவிழாவிற்கு நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான மக்கள் படையெடுத்துச் சென்றுள்ளனர் பல அடியார்கள் தூக்கு காவடி, பால்க்காவடி, அங்க பிரதஸ்டை, பால்குடம் போன்ற நேர்த்திக்கடன்களை நிறைவேற்றினர்.