yarlathirady.com

தேனிசை தென்றல் தேவா தனது 75ஆவது வயதில் காலமானார்.

[2026-10-18 09:40:44] Views:[52]

பிரபல இசையமைப்பாளர் தேவா உடல்நலக்குறைவால் தனது 75 வது வயதில் காலமானார்.

அவருக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவரின் திடீர் மறைவு சினிமா உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தேனிசைத் தென்றல் என ரசிகர்களால் அழைக்கப்படும் இசையமைப்பாளர் தேவா, தமிழ் திரையுலகில் தனக்கென்று தனித்த இடம் பிடித்த இசையமைப்பாளர்களில் ஒருவர்.

கடந்த 1989ஆம் ஆண்டு வெளிவந்த 'மனசுக்கேத்த மகாராசா' என்கிற படத்தின் மூலம் அறிமுகமான தேவா பல்வேறு மொழிகளில் 400க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

கடந்த 90களில் இளையராஜா ஒருபுறம், ஏ.ஆர் ரஹ்மான் மறுபுறம் ஆதிக்கம் செலுத்தி வந்த காலகட்டத்தில் தேவாவின் பாடல்களுக்குத் தனித்த ரசிகர் பட்டாளம் இருந்தது.

மறைந்த அன்னாரின் உடலுக்கு சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பல தரப்பினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.


சினிமாசெய்திகள்
இசையமைப்பாளர் தேவா குடும்பத்தில் மற்றுமொருவர் காலமானார்.!
2026-10-20 11:51:59
பிரபல இசையமைப்பாளர் தேவாவின் சகோதரர் சபேஷின் மகனும், நடிகருமான கார்த்திக் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்.
ஹாலிவுட் அளவுக்கு மிரட்டும் பிரம்மாண்டம் ‘ராமாயணா’
2026-10-18 16:34:17
வால்மீகியின் இதிகாச ராமாயணத்தை அடிப்படையாக வைத்து, இயக்குநர் நிதேஷ் திவாரி பெரும் பொருட்செலவில் 'ராமாயணா' திரைப்படத்தை உருவாக்கி வருகிறார்.
தேனிசை தென்றல் தேவா தனது 75ஆவது வயதில் காலமானார்.
2026-10-18 09:40:44
பிரபல இசையமைப்பாளர் தேவா உடல்நலக்குறைவால் தனது 75 வது வயதில் காலமானார்.