கதவு உடைத்து நகை திருட்டு
[2025-03-05 19:03:32] Views:[95] நீர்கொழும்பு பிரதேசத்தில் உள்ள வீடொன்றின் கதவை உடைத்து சுமார் 2 இலட்சம் ரூபா பெறுமதியான நகைகள் மற்றும் பொருட்களைத் திருடிய சந்தேக நபர் நீர்கொழும்பு - கொடகம பிரதேசத்தில் வைத்து நேற்று (04) கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 35 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது. சந்தேக நபரிடமிருந்து 05 கிராம் 100 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள், கைக்கடிகாரம், டெப் கணினி மற்றும் கமரா உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.