யாழ்ப்பாணம் காங்கேசன்துறை சீமேந்து தொழிற்சாலைக்கு இன்று அமைச்சர்கள் விஜயம்
[2025-03-07 19:02:32] Views:[93] இன்று(7) யாழ்ப்பாணம் காங்கேசன்துறை சீமேந்து தொழிற்சாலைக்கு அமைச்சர் குழாம் நேரில் விஜயம் மேற்கொண்டு , தொழிற்சாலையை மீள இயக்குவது தொடர்பில் ஆராய்ந்துள்ளனர்.
உரிய ஆய்வுகள், கலந்துரையாடல்களின் பின்னர், மக்களுக்கு பலனளிக்கும் வகையில் இறுதி தீர்மானம் எட்டப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இந்த விஜயத்தில் கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி, கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் , நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் ஹர்ஷன சூரியப்பெரும, வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான கருணநாதன் இளங்குமரன் மற்றும் எஸ். ஸ்ரீ பவானந்தராஜா, யாழ். மாவட்ட செயலாளர் பிரதீபன், அரச அதிகாரிகள் உள்ளிட்டோர் சீமேந்து தொழிற்சலையை பார்வையிட்டனர்.