சட்டவிரோத விடுதி முற்றுகை; பெண்கள் மூவர் கைது !
[2025-03-08 09:25:53] Views:[115] மட்டக்களப்பு, பாசிக்குடா பகுதியில் ஹோட்டல் என்ற பெயரில் நீண்ட காலமாக இயங்கி வந்த சட்டவிரோத விடுதி ஒன்றை முற்றுகையிட்ட பொலிஸார் தவறான தொழிலில் ஈடுபட்ட மூன்று பெண்களை கைது செய்துள்ளனர்.
நேற்று (07) மாலை 5.00 மணியளவில் மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸாரால் குறித்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நீதிமன்றத்தின் அனுமதியை பெற்று இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
முற்றுகையின் போது, தவறான தொழிலில் ஈடுபட்டிருந்த இரண்டு பெண்கள் மற்றும் விடுதியை நிர்வகித்த பெண் முகாமையாளர் ஆகிய மூன்று பெண்களை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.