கல்சியம் நீக்கி திரவத்தை அருந்திய குடும்பஸ்தர் உயிரிழப்பு..!
[2025-03-09 08:55:34] Views:[101] யாழ்ப்பாணத்தில் கல்சியம் நீக்கி திரவத்தை அருந்திய குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கச்சாய் தெற்கு, கொடிகாமம் பகுதியைச் சேர்ந்த 64 வயதான நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் நேற்றையதினம் அவரது வீட்டில் இருந்த கல்சியம் நீக்கி திரவத்தை அருந்திய நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை கொண்டு செல்லப்பட்டார்.
இதனையடுத்து அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி இன்றையதினம் உயிரிழந்துள்ளார். சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாய பிறேம்குமார் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.