தமிழரசுக் கட்சி அடுத்த தேர்தலில் தனித்தே போட்டியிடும்!
[2025-03-09 09:23:11] Views:[85] இலங்கை தமிழரசுக் கட்சி இம்முறை உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தனித்தே போட்டியிடும் எனவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக போட்டியிடும் பேச்சுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
நேற்று (08) மாலை இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட கூட்டம் நடைபெற்றது. அதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்ட தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் இவ்வாறு குறிப்பிட்டார்.
எதிர்வரும் வாரத்திற்குள் இலங்கை தமிழரசுக்கட்சியின் வேட்பாளர் பட்டியலை இறுதி செய்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சாணக்கியன் தலைமையில் குறித்த கூட்டம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.