உலகப் புகழ்பெற்ற பாடகர் ஆலோ பிளாக் இலங்கைக்கு மூன்று நாள் விஜயம்
[2025-03-10 11:39:08] Views:[107] இன்று (10) உலகப் புகழ்பெற்ற அமெரிக்க பாடகர் ஆலோ பிளாக் இலங்கைக்கு மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு காலை கட்டுநாயக்க விமான நிலையம் வந்தடைந்தார்.
இலங்கையில் சுகாதார துறையில் முதலீட்டுத் திட்டத்தை தொடங்கி வைப்பதற்காக அமெரிக்காவின் ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கோமிக உடுகமசூரியவின் அழைப்பின் பேரில் அவர் இலங்கை வந்துள்ளார். கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவருக்கு இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையத்தின் அதிகாரிகள் மற்றும் பேராசிரியர் கோமிக உடுகமசூரிய ஆகியோரால் வறவேற்கப்பட்டுள்ளார்.
ஆலோ பிளாக் உலகெங்கிலும் உள்ள 22 நாடுகளில் இசை தரவரிசையிலும் அமெரிக்காவில் கிராமி விருதுகளுக்கான பரிந்துரைக்கப்பட்டவர்களிலும் முதலிடத்தில் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.