முச்சக்கரவண்டி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
[2025-03-10 12:00:09] Views:[139] கிரிஎல்ல-பானந்துறை வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பானந்துறையில் இருந்து கிரிஎல்ல நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி கவிழ்ந்து விபத்துக்குள்ளதானதாக தெரிவிக்கப்படுகிறது. முச்சக்கரவண்டி சாரதி மற்றும் பின் இருக்கையில் அமர்ந்து சென்ற நபரொருவரும் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் பின் இருக்கையில் பயணித்த நபர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.