பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ள தபால் தொழிற்சங்கங்கள்.!
[2025-03-11 10:07:03] Views:[162] தபால் திணைக்களத்தில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி அனைத்து தபால் தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளது.
தபால் மற்றும் தொலைத்தொடர்பு தொழிற்சங்கத்தின் செயலாளர் மஞ்சுளா ஜயசுந்த இந்த தகவலை தெரிவித்துள்ளார்.
ஆட்சேர்ப்பு, நியமனம், பதவி உயர்வு, சம்பள உயர்வு உள்ளிட்ட நீண்டகாலமாக நிலவும் பல்வேறு பிரச்னைகளை முன்னிறுத்தி எதிர்வரும் 18 ஆம் திகதி பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளனர்.
இந்த விடயங்கள் தொடர்பில் தபால் மா அதிபருடன் கலந்துரையாடியதாகவும், அங்கிருந்து எந்தவொரு சாதகமான முடிவையும் எடுக்கத் தவறியதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.