கிராம உத்தியோகத்தரை தாக்கிய பெண்கள் இருவர் கைது!
[2025-03-12 12:20:05] Views:[87] கிளிநொச்சி, கரைச்சி பகுதியில் கிராம உத்தியோகத்தர் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொண்ட இரு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த தாக்குதல் சம்பவம் கடந்த 08.03.2025 சர்வதேச மகளிர் தினத்தன்று கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கிருஷ்ணபுரம் பகுதியில் நடந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்;
அன்றைய தினம் உத்தியோகத்தரிடம் சென்ற நான்கு பெண்கள் தமது வதிவிடத்தை உறுதி செய்து தருமாறு கேட்ட போது கிராம சேவையாளர் உரிய சரியான ஆவணங்கள் கொண்டுவர வேண்டும் என கூறியுள்ளார்.
இதனையடுத்து, குறித்த பெண்கள் உத்தியோகத்தரை தகாத வார்த்தைகளால் திட்டியதுடன், அவரை தாக்கியுள்ளனர்.
இந்நிலையில், உத்தியோகத்தர் சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்ததை அடுத்து இச்சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.