பாடசாலை விடுமுறை குறித்து கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு..!
[2025-03-14 10:39:57] Views:[118] பாடசாலை விடுமுறை குறித்து கல்வி அமைச்சு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, நாட்டிலுள்ள அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தமிழ் மற்றும் சிங்கள மொழி மூலமான பாடசாலைகளின் முதலாம் தவணையின் முதலாம் கட்ட கல்விச் செயற்பாடுகள் இன்றுடன்(14) நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்விச் செயற்பாடுகள் எதிர்வரும் ஏப்ரல் 01 ஆம் திகதி ஆரம்பமாகும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை 2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைகள் குறித்த விடுமுறைக் காலத்தில் இடம்பெறவுள்ளது.
அதற்கமைய சாதாரண தரப் பரீட்சைகள் எதிர்வரும் 17 ஆம் திகதி ஆரம்பமாகி எதிர்வரும் 26 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளன. இந்தநிலையில் முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்விச் செயற்பாடுகள் ஏப்ரல் 01 ஆம் திகதி ஆரம்பமாகி 11 ஆம் திகதி வரை நடைபெறும்.
ஏப்ரல் மாதம் 12ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை மீண்டும் விடுமுறை வழங்கப்பட்டு முதலாம் தவணையின் மூன்றாம் கட்ட கல்விச் செயற்பாடுகளுக்காக ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி பாடசாலைகள் திறக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.