திருகோணமலையைத் தொடர்ந்து கொழும்பில் சகோதரர்கள் இருவர் வெட்டிக் கொலை!!
[2025-03-15 11:22:35] Views:[117] நேற்றையதினம் திருகோணமலையில் இரு பெண்கள் வெட்டிக்கொல்லப்பட்ட நிலையில் இன்று (15) கொழும்பில் இரு சகோதரர்கள் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்று (15) காலை கிராண்ட்பாஸ், களனிதிஸ்ஸகம பிரதேசத்தில் 23 மற்றும் 24 வயதுடைய சகோதரர்கள் இருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொலைக்கான காரணம் வெளியாகாத நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிராண்ட்பாஸ் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.