திருகோணமலை இரட்டைக் கொலை! 15 வயது சிறுமி கைது!!
[2025-03-15 11:57:46] Views:[127] திருகோணமலை, மூதூர் பகுதியில் பெண்கள் இருவர் வெட்டுக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் 15 வயது சிறுமி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்றைய தினம் (14) அதிகாலை திருகோணமலை, மூதூர், தஹாநகரில் உள்ள வீட்டில் இரண்டு பெண்கள் வெட்டிக் கொல்லப்பட்ட நிலையிலும், சிறுமி ஒருவர் காயமடைந்த நிலையிலும் மீட்கப்பட்டனர்.
கொலை செய்யப்பட்ட சிறிதரன் ராஜேஸ்வரி (68 வயது) மற்றும் (74 வயது) சக்திவேல் ராஜகுமாரி ஆகிய பெண்கள் இருவரும் சகோதரிகள் எனவும், காயமடைந்த சிறுமி இறந்த பெண்களில் ஒருவரின் பேத்தி என தெரியவந்திருந்தது.
இந்த கொலைச் சம்பவம் தொடர்பில் சம்பவத்தில் காயமடைந்த 15 வயது சிறுமியிடம் பொலிஸார் மேற்கொண்ட நீண்ட நேரம் விசாரணையின் பின்னர் குறித்த சிறுமி தானே கொலையைச் செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளார்.
அம்மம்மா தன்னை எப்போதும் திட்டுவதாகவும் தன் மீது அவருக்கு பாசம் இல்லை என்றும் மன அழுத்தம் காரணமாக இருவரையும் கொலை செய்துவிட்டதாகவும் பொலிஸாரிடம் குறித்த சிறுமி வாக்குமூலம் அளித்துள்ளார்.
அதன் பின்னர் சிறுமியை கைது செய்த பொலிஸார் மூதூர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.