வாகன தரிப்பிடமாக மாற்றப்பட்டுள்ள பளை மத்திய பேருந்து நிலையம்;
[2025-03-17 16:50:14] Views:[130] கிளிநொச்சி பளை மத்திய பேருந்து நிலையத்துக்குள் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் துவிச்சக்கர வண்டிகளை நிறுத்தி வாகன தரிப்பிடமாக மாற்றப்பட்டுள்ளதாக பயணிகள் குற்றம் சுமத்துகின்றனர்.
வேலைக்கு செல்வோர் தங்களது பயண வண்டிகளை பேருந்து தரிப்பிடத்திற்குள் நிறுத்திச் செல்வதால் பயணிகள் சிரமங்களை எதிர் நோக்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதோடு பாடசாலை முடிவடையும் நேரத்தில் சிலர் பளை பேருந்து தரிப்பிடத்தில் இருந்து கொண்டு மாணவர்கள் மற்றும் பயணிகளிடம் அநாகரிகமாக நடந்துகொள்வதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
வாகனங்களை பேருந்து நிலையத்துக்குள் நிறுத்தி வைப்பதால், மாணவர்கள் உட்பட பயணிகள், வெளியில் வந்து கொட்டும் வெயிலில் நிற்பதாக கூறப்படுகின்றது.
எனவே இது தொடர்பில் சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பயணிகள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.