yarlathirady.com

யாழ்ப்பணம் மாவட்டத்தில் 11,081 குடும்பங்களுக்கு காணிகள் இல்லை..!

[2025-03-19 12:28:01] Views:[94]

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 11 ஆயிரத்து 81 குடும்பங்கள் தமக்குக் காணிகள் இல்லை என்றும், காணிகளை வழங்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளன என்று யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி, கடந்த 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டு காலப்பகுதியில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள 15 பிரதேச செயலர் பிரிவுகளில், காரைநகர் பிரதேச செயலர் பிரிவில் 27 குடும்பங்களும், கோப்பாய் பிரதேச செயலர் பிரிவில் 823 குடும்பங்களும், கரவெட்டி பிரதேச செயலர் பிரிவில் 796 குடும்பங்களும், யாழ்ப்பாணம் பிரதேச செயலர் பிரிவில் 2 ஆயிரத்து 828 குடும்பங்களும், மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் 342 குடும்பங்களும், சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் பிரிவில் 568 குடும்பங்களும், பருத்தித்துறை பிரதேச செயலாளர் பிரிவில் 730 குடும்பங்களும், வேலணைப் பிரதேச செயலாளர் பிரிவில் 456 குடும்பங்களும், நல்லூர் பிரதேச செயலாளர் பிரிவில் ஆயிரத்து 855 குடும்பங்களும், உடுவில் பிரதே செயலர் பிரிவில் ஆயிரத்து 176 குடும்பங்களும், தெல்லிப்பழை பிரதேச செயலர் பிரிவில் 526 குடும்பங்களும், ஊர்காவற்துறை பிரதேச செயலாளர் பிரிவில் 256 குடும்பங்களும், சாவகச்சேரி பிரதேச செயலாளர் பிரிவில் 589 குடும்பங்களும், சங்கானை பிரதேச செயலர் பிரிவில் இருந்து 109 குடும்பங்களும் என யாழ். மாவட்டத்தில் 11 ஆயிரத்து 81 குடும்பங்கள் தமக்கு காணிகளை வழங்குமாறு யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்திடம் கோரிக்கைகளை முன்வைத்துள்ளன.

இவற்றில், யாழ்ப்பாணம் பிரதேச செயலாளர் பிரிவில் 2 குடும்பங்களுக்கும், சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் பிரிவில் 38 குடும்பங்களுக்கும், வேலணை பிரதேச செயலாளர் பிரிவில் 22 குடும்பங்களுக்கும், தெல்லிப்பழை பிரதேச செயலாளர் பிரிவில் 85 குடும்பங்களுக்கும், ஊர்காவற்துறை பிரதேச செயலாளர் பிரிவில் 26 குடும்பங்களுக்கும், சாவகச்சேரி பிரதேச செயலாளர் பிரிவில் 72 குடும்பங்களுக்கும் என மொத்தமாக 352 குடும்பங்களுக்கு இவ்வாறு காணிகள் வழங்கப்பட்டுள்ளன. 10 ஆயிரத்து 729 குடும்பங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.


சினிமாசெய்திகள்
ராட்சசன் 2
2025-07-09 10:56:44
விஷ்ணு விஷால் எந்த ஒரு ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டாலும், ராட்சசன் 2 எப்போ என்பதே ரசிகர்களின் கேள்வியாக இருக்கும்.
பறந்து போ திரைப்படம்.
2025-07-09 10:38:46
கடந்த வாரம் திரைக்கு வந்த பறந்து போ திரைப்படம் உலகளவில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
3BHK திரைப்படம்
2025-07-06 11:25:00
இரண்டு நாட்களில் 3BHK திரைப்படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
மெர்சல் படத்தில் விஜய் மகனாக நடித்த சிறுவன்
2025-07-04 19:24:31
இதோ அவரின் புகைப்படம்.
நடிகர் மம்மூட்டிக்கு கிடைத்த கௌரவம்
2025-07-03 13:14:12
அவர் தற்போதும் இளம் ஹீரோக்களுக்கு ஈடு கொடுக்கும் வகையில் படங்கள் நடித்து வருகிறார்.
விஜய் ஆண்டனியின் மார்கன் திரைப்படம்
2025-07-02 19:31:57
கடந்த ஜுன் 27ம் தேதி வெளியான இப்படம் கிரைம் த்ரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ளது.