கட்டுப்பணம் செலுத்தும் காலம் இன்றுடன் நிறைவு!
[2025-03-19 13:04:22] Views:[83] உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் காலம் இன்று (19) நண்பகல் 12.00 மணியுடன் நிறைவடைந்துள்ளது.
கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கை கடந்த 3ஆம் திகதி தொடங்கிய நிலையில், எக்காரணம் கொண்டும் இந்த இறுதி தினம் நீட்டிக்கப்படாது என்றும் தேர்தல் ஆணைக்குழு அறிவித்திருந்தது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை ஏற்றுக்கொள்வதற்காக மாவட்டச் செயலக அலுவலகங்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
மேலும், உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளல் கடந்த 17 ஆம் திகதி ஆரம்பமான நிலையில், வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்வது நாளை (20) நண்பகல் 12.00 மணியுடன் முடிவடையவுள்ளது.
அதன்படி, நாளை நண்பகல் 12.00 மணி முதல் ஆட்சேபனைகளைத் தெரிவிக்க ஒன்றரை மணி நேரம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும், அதன் பிறகு உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.