yarlathirady.com

நாடாளுமன்றில் அர்ச்சுனா எம்.பிக்கு விதிக்கப்பட்ட தடை ! சபாநாயகரின் அதிரடி நடவடிக்கை:

[2025-03-19 15:47:51] Views:[108]

இலங்கை நாடாளுமன்ற மரபுகளுக்கு மாறாக செயற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா மீது தற்காலிகமாக தடை ஒன்றை விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன இன்று (19) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் செயற்பாடுகள் மற்றும் வார்த்தைகள் தேசிய நல்லிணக்கத்துக்கும், இன சகவாழ்வுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளன. இதற்கு நான் கடும் அதிருப்தியை வெளிப்படுத்துகிறேன் என சபாநாயகர் சபைக்கு அறிவித்துள்ளார்.

அத்துடன், அர்ச்சுனா எதிர்வரும் மே மாதம் வரை நாடாளுமன்றத்தில் ஆற்றும் உரையை நேரடியாக ஒளிப்பரப்பு செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், நாடாளுமன்ற உரையை அவர் சமூக வலைத்தளங்களில் பதிவிடக் கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.

அவர் இதுவரை காலமும் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையில் பயன்படுத்தியுள்ள சர்ச்சைக்குரிய வார்த்தைகள் அனைத்தையும் ஹன்சாட் பதிவில் இருந்து நீக்குமாறும் சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார்.

இராமநாதன் அர்ச்சுனா நாடாளுமன்ற சிறப்புரிமையை பயன்படுத்திக் கொண்டு பெண்களை மிக கீழ்த்தரமாக விமர்சித்துள்ளார். இது நாடாளுமன்ற கெளரவத்தை அவமதிப்பதாகும் என்றும் சபாநாயகர் சுட்டிக்காட்டினார்.


சினிமாசெய்திகள்
ராட்சசன் 2
2025-07-09 10:56:44
விஷ்ணு விஷால் எந்த ஒரு ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டாலும், ராட்சசன் 2 எப்போ என்பதே ரசிகர்களின் கேள்வியாக இருக்கும்.
பறந்து போ திரைப்படம்.
2025-07-09 10:38:46
கடந்த வாரம் திரைக்கு வந்த பறந்து போ திரைப்படம் உலகளவில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
3BHK திரைப்படம்
2025-07-06 11:25:00
இரண்டு நாட்களில் 3BHK திரைப்படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
மெர்சல் படத்தில் விஜய் மகனாக நடித்த சிறுவன்
2025-07-04 19:24:31
இதோ அவரின் புகைப்படம்.
நடிகர் மம்மூட்டிக்கு கிடைத்த கௌரவம்
2025-07-03 13:14:12
அவர் தற்போதும் இளம் ஹீரோக்களுக்கு ஈடு கொடுக்கும் வகையில் படங்கள் நடித்து வருகிறார்.
விஜய் ஆண்டனியின் மார்கன் திரைப்படம்
2025-07-02 19:31:57
கடந்த ஜுன் 27ம் தேதி வெளியான இப்படம் கிரைம் த்ரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ளது.