yarlathirady.com

தமிழக படகோட்டிகளுக்கு 06 மாத சிறை தண்டனை! மீனவர்கள் கடும் நிபந்தனைகளுடன் விடுதலை;

[2025-03-20 10:31:47] Views:[82]

அத்துமீறி நெடுந்தீவு கடற்பரப்பினுள் படகினை செலுத்திய, தமிழக படகோட்டிகள் இருவருக்கு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்று 06 மாத சிறைத்தண்டனை விதித்துள்ளதுடன், இருவருக்கும் தலா 4 மில்லியன் ரூபாய் தண்டப்பணமும் விதித்துள்ளது.

கடந்த மாதம் 20ஆம் திகதி நெடுந்தீவு கடற்பரப்பினுள் இரண்டு படகுகளில் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் படகோட்டிகள் இருவர் உள்ளிட்ட 06 பேர் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்கள் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

குறித்த வழக்கு நேற்றைய தினம் (19) புதன்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வேளை, படகோட்டிகள் இருவருக்கும் தலா 06 மாத சிறைத்தண்டனையும், தலா 4 மில்லியன் ரூபாய் தண்டபணமும் விதித்த மன்று, தண்ட பணம் செலுத்த தவறின், 03 மாத கால சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என உத்தரவிட்டது.

குறித்த இரண்டு படகுகளிலும் இருந்த நான்கு கடற்தொழிலாளிகளையும் கடுமையாக எச்சரித்த மன்று, 06 வருட காலங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட இரண்டு வருட சிறைத்தண்டனை விதித்து அவர்களுக்கு பிணை வழங்கியது.


சினிமாசெய்திகள்
குட் பேட் அக்லி
2025-04-10 19:52:04
சிறந்து விமர்சனங்கள் வெளிவந்துகொண்டிருக்கும் நிலையில் படத்தின் முதல் நாள் வசூல் குறித்தும் தகவல் வெளியாகியுள்ளதாக ஊடகங்கள் வாயிலாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அடுத்த பைனலிஸ்ட் இவர் தானா - சரிகமப சீசன் 4
2025-04-09 11:41:31
ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள திவினேஷ் தான் 4 வது இறுதி போட்டியாளராக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரஹ்மான் இசையில் ராம் சரண் நடிப்பில் பெத்தி படம்...
2025-04-06 15:12:52
புச்சி பாபு இயக்க இயக்க மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கிறார்கள்.
நடிகர் அஜித் வாங்கிய சம்பளம்
2025-04-06 14:59:21
குட் பேட் அக்லி திரைப்படத்திற்காக அஜித் வாங்கிய சம்பளம் பற்றி தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் ஹீரோவாக நடிக்க அஜித் ரூ. 163 கோடி சம்பளமாக வாங்கியுள்ளார் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மாஸ் லுக்கில் அஜித் - குட் பேட் அக்லி
2025-04-04 12:13:24
இப்படத்தின் டீசர் சென்ற மாதம் வெளிவந்து பட்டையை கிளப்பியது.
பாரதிராஜாவின் மகன் நடிகர் மனோஜ் பாரதிராஜா காலமானார்..!
2025-03-26 09:18:24
பாரதி ராஜா இயக்கத்தில் 1999 ஆம் ஆண்டு வெளியான தாஜ்மஹால் படத்தில் கதாநாயகனாக அறிமுகமான 48 வயதான மனோஜ் பாரதிராஜா இதய அறுவைசிகிச்சை செய்து ஓய்வில் இருந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளார்.