yarlathirady.com

இந்திய கடற்பரப்பில் தத்தளித்த யாழ் மீனவர்கள்.! அருகில் கஞ்சா பொட்டலங்கள் இருந்ததால் தீவிர விசாரணை;

[2025-03-20 11:44:47] Views:[109]

இந்திய கடற்பரப்பில் இலங்கை மீனவர்கள் இருவர் படகில் தத்தளிப்பதாக அந்நாட்டு மரைன் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அவர்களை மீட்டுள்ளனர்.

குறித்த கடற்பகுதியில் கஞ்சா பொட்டலங்கள் காணப்பட்டமையினால் குறித்த மீனவர்களுக்கு அதில் தொடர்பு உள்ளதா என்பது குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர் என தெரிவிக்கப்படுகிறது.

இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி மீன்பிடி துறைமுகத்தில் அருகே கடலில் பைபர் படகில் இலங்கை மீனவர்கள் இருவர் தத்தளிப்பதாக மரைன் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இருவரையும் மீட்டு கரைக்கு அழைத்து வந்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் இருவரும் கடந்த 15ஆம் திகதி யாழ்ப்பாணம், குருநகர் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்க சென்று எஞ்சின் பழுது காரணமாக கடலில் தத்தளித்த ஞானராஜ் மற்றும் பூலோக தாசன் என்பது தெரியவந்துள்ளது.

குறித்த மீனவர்கள் தத்தளித்த கடற்பகுதியில் ஒரு மூட்டையில் கஞ்சா பொட்டலங்கள் இருந்ததால் அவர்கள் இருவருக்கும், கஞ்சா பொட்டலங்களுக்கும் தொடர்பு உள்ளதா என்பது என்ற கோணத்தில் மரைன் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர் என தெரிவிக்கப்படுகிறது.


சினிமாசெய்திகள்
குட் பேட் அக்லி
2025-04-10 19:52:04
சிறந்து விமர்சனங்கள் வெளிவந்துகொண்டிருக்கும் நிலையில் படத்தின் முதல் நாள் வசூல் குறித்தும் தகவல் வெளியாகியுள்ளதாக ஊடகங்கள் வாயிலாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அடுத்த பைனலிஸ்ட் இவர் தானா - சரிகமப சீசன் 4
2025-04-09 11:41:31
ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள திவினேஷ் தான் 4 வது இறுதி போட்டியாளராக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரஹ்மான் இசையில் ராம் சரண் நடிப்பில் பெத்தி படம்...
2025-04-06 15:12:52
புச்சி பாபு இயக்க இயக்க மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கிறார்கள்.
நடிகர் அஜித் வாங்கிய சம்பளம்
2025-04-06 14:59:21
குட் பேட் அக்லி திரைப்படத்திற்காக அஜித் வாங்கிய சம்பளம் பற்றி தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் ஹீரோவாக நடிக்க அஜித் ரூ. 163 கோடி சம்பளமாக வாங்கியுள்ளார் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மாஸ் லுக்கில் அஜித் - குட் பேட் அக்லி
2025-04-04 12:13:24
இப்படத்தின் டீசர் சென்ற மாதம் வெளிவந்து பட்டையை கிளப்பியது.
பாரதிராஜாவின் மகன் நடிகர் மனோஜ் பாரதிராஜா காலமானார்..!
2025-03-26 09:18:24
பாரதி ராஜா இயக்கத்தில் 1999 ஆம் ஆண்டு வெளியான தாஜ்மஹால் படத்தில் கதாநாயகனாக அறிமுகமான 48 வயதான மனோஜ் பாரதிராஜா இதய அறுவைசிகிச்சை செய்து ஓய்வில் இருந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளார்.