ஐந்து நபர்களை குறிவைத்து துப்பாக்கிச் சூடு: காலியில் பரபரப்பு சம்பவம்..!!
2025-01-04 21:34:11
இன்று அதிகாலை 1:00 மணியளவில் வெலிகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கப்பரதோட்டை வள்ளிவெல வீதியில் நடந்து சென்ற 5 நபர்களை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
2025-01-04 21:34:11

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு.
2025-01-04 21:01:39
தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் எதிர்வரும் 08ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதாக பரீட்சை திணைக்களத்தினால் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
2025-01-04 21:01:39

யாழில் எலிக்காய்ச்சலால் இருவர் உயிரிழப்பு..!!!
2025-01-04 14:46:15
யாழ்ப்பாண மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளநிலைமைக்கு பின்னர் பருத்தித்துறை, கரவெட்டி, சாவகச்சேரி ஆகிய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் எலிக்காய்ச்சல் பரவி வருகின்றது.
யாழ்ப்பாண மாவட்டத்தில் இந்த காய்ச்சலுடன் இதுவரை மொத்தமாக 33 நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
2025-01-04 14:46:15

வாகனங்கள் தொடர்பாக கடுமையாக்கப்பட்டுள்ள சட்டம்..!
2025-01-04 10:44:38
மோட்டார் வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள தேவையற்ற உதிரிபாகங்கள் மற்றும் உபாகரணங்கள் தொடர்பான சட்டத்தை கடுமையாக செயட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
2025-01-04 10:44:38

சிவனொளிபாதமலையில் நடைமுறைப்படுத்தப்பட்ட கிளீன் ஶ்ரீலங்கா திட்டம்..!
2025-01-04 10:40:29
சிவனொளிபாதமலை பக்தர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் மற்றும் மஸ்கெலியாவில் இருந்து நல்லதண்ணியை நோக்கிச் செல்லும் பயணிகள் போக்குவரத்து பேருந்துகள் மற்றும் வேன்கள் நேற்று(03) நல்லதண்ணி பொலிஸ் அதிகாரிகளால் திடீரென சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. கிளீன் ஶ்ரீலங்கா திட்டத்துடன் இணைந்ததாக இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
2025-01-04 10:40:29

சட்டவிரோதமாக இந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்ட பெருந்தொகை இரசாயன பொருட்களுடன் மூவர் கைது!
2025-01-03 23:34:07
யாழில் இராணுவ புலனாய்வு பிரிவினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது பெருந்தொகையான இரசாயன பொருட்களுடன் இளைஞர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
2025-01-03 23:34:07

சாரதி அனுமதிப்பத்திரம் பெற காத்திருப்போருக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்..!!
2025-01-03 21:11:55
அச்சிடுவதில் தாமதம் ஏற்பட்டு நிலுவையில் உள்ள 130,000 சாரதி அனுமதிப்பத்திரங்கள் அச்சிடப்பட்டு ஒரு மாதத்திற்குள் விநியோகிக்கப்படும் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குமார குணசேன தெரிவித்துள்ளார்.
2025-01-03 21:11:55

சீனாவை அச்சுறுத்தும் புதிய வகை வைரஸ்: மோசமடையும் நிலைமை..!
2025-01-03 15:26:38
சீனாவில் புதிய வகையான வைரஸ் தொற்று பரவி வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதனை ஹியூமன் மெட்டாப்நியூமோவைரஸ்(HMPV) என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளதுடன், கொரோனா தொற்று போன்ற அறிகுறிகளைக் காட்டுவதாகவும் கூறப்படுகிறது.
2025-01-03 15:26:38

திருகோணமலை கடலில் மீட்கப்பட்ட ஆளில்லா விமானம் தொடர்பில் வெளியாகிய தகவல்.
2025-01-03 11:42:53
திருகோணமலை கடல் பகுதியில் உள்ளூர் கடற்றொழிலாளர்களால் மீட்கப்பட்ட ஜெட் மூலம் இயங்கும் சிறிய ரக ஆளில்லா விமானமானது நாட்டின் பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலையும் ஏற்படுத்தவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
2025-01-03 11:42:53

புதிய இராணுவத் தளபதியிடமிருந்து இராணுவத்தினருக்கு விடுக்கப்பட்டுள்ள விசேட உத்தரவு..!!
2025-01-03 10:52:19
சட்டவிரோத போதைப்பொருள் தொடர்பான புலனாய்வு நடவடிக்கைகளை அதிகரிக்குமாறு இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ பாதுகாப்புப் படைத் தளபதிகள் உட்பட அனைத்து இராணுவ தரப்பினர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
2025-01-03 10:52:19

கிணற்றிலிருந்து இனம்தெரியாத பெண்ணொருவரின் சடலம் மீட்பு: யாழில் பரபரப்பு சம்பவம்..!!
2025-01-03 10:37:16
நேற்று (02) மாலை சாவகச்சேரி போலீஸ் பிரிவுக்குட்பட்ட கிராம்புவில் பகுதியில் கிணறொன்றுக்குள் இருந்து வயோதிப பெண்ணொருவரின் சடலமொன்று அழுகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
2025-01-03 10:37:16

தொழில் அமைச்சு அறிமுகப்படுத்தியுள்ள புதிய வாட்ஸ்அப் இலக்கம்..!
2025-01-02 21:25:57
விரைவான பதிலுக்காக தொழிலாளர் அமைச்சகத்தால் புதிய வட்ஸ்அப் இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தொழிலாளர் அமைச்சகதிட்தினால் 0707 22 78 77 எனும் இந்த புதிய வட்ஸ்அப் எண் அதன் சேவைகளை மேலும் திறம்படச் செய்யும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
2025-01-02 21:25:57

முட்டை விலையில் ஏற்பட்டுள்ள அதிரடி மாற்றம்..!
2025-01-02 21:21:20
கடந்த சில நாட்களாக சந்தையில் 28/= ரூபாயாக வீழ்ச்சியடைந்திருந்த முட்டையின் விலை மீண்டும் 36/= ரூபாவாக அதிகரித்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
2025-01-02 21:21:20

யாழில் 2 வருடங்களுக்கு முன் அடக்கம் செய்யப்பட்ட நபரின் சடலத்தை தோண்டுமாறு நீதிமன்றம் அதிரடி உத்தரவு ..!!
2025-01-02 21:16:11
மன்னார் நீதிமன்றத்தில் விபத்து வழக்குடன் தொடர்புடையவரின் சடலத்தை மீண்டும் தோண்டுமாறு மல்லாகம் நீதிமன்றம் விசேட உத்தரவொன்றை பிறப்பித்துள்ளது. இரண்டு வருடங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம், கல்லூண்டாயில் உள்ள சேமக்காலையில் அடக்கம் செய்யப்பட்ட 40 வயதுடைய நபரின் சடலமே தோண்டுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
2025-01-02 21:16:11

யாழ்ப்பாண நீதிமன்றத்திற்கு முன்னால் வாள்வெட்டு தாக்குதல்: பிரதான சந்தேக நபர் இன்று கைது..!!
2025-01-02 21:10:07
யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் இடம்பெற்ற வழக்கு ஒன்றிக்கு சாட்சிக்காக வந்த நபரை வாளால் வெட்ட முயற்சித்த சந்தேக நபர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
2025-01-02 21:10:07

பல்கலைக்கழக மாணவன் மோட்டார் சைக்கிள் விபத்தினால் பரிதாபமாக உயிரிழப்பு..!!
2025-01-02 21:02:37
மோட்டார் சைக்கிள் விபத்தினால் படுகாயமடைந்த கொழும்பு பல்கலைக்கழக இறுதியாண்டு மாணவனொருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார்.
2025-01-02 21:02:37

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ள 10 திரைப்படங்கள்..!!
2025-01-02 11:38:44
பொங்கல் தினத்தை முன்னிட்டு சுமார் பத்து திரைப்படங்கள் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் தற்போது அந்த குறித்த படங்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.
<< Prev.Next > > Current Page: 40
2025-01-02 11:38:44
