வடக்கு கிழக்கிற்கு இடியுடன் கூடிய கனமழை..!
[2025-05-25 12:33:43] வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளுக்கு இன்று நண்பகல் முதல் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை இடி மின்னலுடன் கூடிய கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியற்துறை மூத்த விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
''சஞ்சாரக உதாவ 2025” ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்:
[2025-05-24 13:00:26] இலங்கையின் சுற்றுலாத் துறையில் பங்குதாரர்களை செயற்திறனுடன் இணைக்கின்ற நாட்டின் மிகப்பெரிய சுற்றுலா கண்காட்சியான " சஞ்சாரக உதாவ 2025" இன்று (23) கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது.
தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி - முன்னாள் அமைச்சர் கைது!
[2025-05-23 22:35:29] கொழும்பு ஹெவ்லொக் சிட்டி குடியிருப்பு வளாகத்தில் வசிக்கும் பெண்ணொருவரின் பயணப் பையில் இருந்து தங்க முலாம் பூசப்பட்ட T56 ரக துப்பாக்கி ஒன்று கண்டு பிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க கைது செய்யப்பட்டுள்ளார்.
போதை மாத்திரைகளுடன் இருவர் கைது.!
[2025-05-23 22:04:44] யாழ்ப்பாணத்தில் போதை மாத்திரைகளுடன் இரண்டு இளைஞர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முஸ்லிம் பாடசாலைகளுக்கு விஷேட விடுமுறை:
[2025-05-23 21:29:20] புனித ஹஜ்ஜுப்பெருநாளை முன்னிட்டு எதிர்வரும் 06.06.2025 வெள்ளிக்கிழமை மற்றும் 09.06.2025 திங்கட்கிழமை ஆகிய தினங்களில் நாட்டிலுள்ள சகல முஸ்லிம் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்குவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
தாய்நாடு திரும்பிய யாழ். குயில் பிரியங்கா!!
[2025-05-23 15:01:54] இந்தியாவின் விஜய் தொலைக்காட்சியின் சுப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 பாடல் போட்டியில் பங்குபற்றிய யாழ். கொக்குவிலை சேர்ந்த சிந்துமயூரன் பிரியங்கா தாய்நாடு திரும்பியுள்ளார்.
துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் கடற்படை சிப்பாயின் சடலம் மீட்பு.!
[2025-05-23 10:04:22] மன்னார் கடற்கரை பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் கடற்படை வீரர் ஒருவரின் சடலம் நேற்று (22) மீட்கப்பட்டுள்ளது.
மே மாதத்துக்கான அஸ்வெசும கொடுப்பனவு வங்கிக் கணக்குகளுக்கு;
[2025-05-22 21:23:20] மே மாதத்துக்கான அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு இன்று (22) பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைப்பிலிடப்படும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
பூவரசங்குளம் பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரிக்கு விளக்கமறியல்!
[2025-05-22 19:49:45] இலஞ்சம் வாங்கும் போது கைதுசெய்யப்பட்ட வவுனியா, பூவரசங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு.
யாழில் யுவதி கடத்தல்.! பொலிஸார் தீவிர விசாரணையில்:
[2025-05-22 15:49:06] யாழ்ப்பாணம், தெல்லிப்பழை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இளவாலை சந்திக்கு அருகாமையில் நேற்று (21) யுவதி ஒருவர் கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
IPL பார்த்துக்கொண்டிருந்த இளைஞன் திடீரென உயிரிழப்பு.!
[2025-05-22 11:14:38] யாழ்ப்பாணத்தில் தனது வீட்டில் இருந்து தொலைக்காட்சியில் IPL போட்டியை பார்த்துக் கொண்டிருந்த இளைஞன் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.
உலக வங்கி குழுவினர் - யாழ். அரசாங்க அதிபருடன் கலந்துரையாடல்!
[2025-05-22 10:37:08] உலக வங்கி குழுவினர் நேற்றைய தினம் (21) யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களை அரசாங்க அதிபர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்கள்.
பதுளை நகரில் சகோதர மீது சரிமாரியாக வாள் வீச்சு தாக்குதல்.!!
[2025-05-21 11:10:56] பதுளை தெயியனாவெலவை பிரதேசத்தை சேர்ந்த சகோதரர்கள் இருவர் இடையே ஏற்பட்ட குடும்ப தகராறு பதுளை நகர் வரை வந்து சரிமாரியான வாள் வீச்சு தாக்குதலில் முடிவடைந்தது.
குறித்த சம்பவம் நேற்று (20) மாலை பதுளை நகர மையத்தில் மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகாமையில் இடம்பெற்றுள்ளது.
யாழில் நீண்ட நாட்களாக துவிச்சக்கர வண்டி திருட்டில் ஈடுபட்டவர் கைது!
[2025-05-21 10:11:43] யாழ்ப்பாணத்தில் நீண்ட நாட்களாக இடம்பெற்ற பல்வேறு துவிச்சக்கர வண்டி திருட்டுக்களை மேற்கொண்ட சந்தேகநபரை யாழ். மாவட்ட பொலிஸ் குற்ற தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
யாழில் மணலுடன் தப்பிச்சென்ற டிப்பர் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு..! வாகனத்தைக் கைவிட்டு தப்பியோடிய சந்தேக நபர்க:
[2025-05-20 20:02:08] யாழ்ப்பாணம் - கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட் வரணிப்பகுதியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச்சென்ற டிப்பர் மீது கொடிகாமம் பொலிஸார் இன்றைய தினம் (20) துப்பாக்கிச்சூடு நடாத்தியுள்ளனர்.
தாளையடி கடல் நீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து கரவெட்டிக்கு குடிதண்ணீர் விநியோகம் ஆரம்பம்.!
[2025-05-20 11:52:55] வடமராட்சி கிழக்கு தாளையடி கடல் நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிதண்ணீர் நேற்றைய தினம் பரீட்சார்த்தமாக கரவெட்டிக்கு விநியோகிக்கப்பட்டது.
உலக சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்படப்போகும் மாற்றம்..!
[2025-05-20 10:38:20] கடந்த நாட்களில் உலக சந்தையில் தங்கத்தின் விலையில் விரைவான சரிவு ஏற்பட்டபோதிலும், விலை மீண்டும் உயர்ந்து வருவதாக தேசிய இரத்தினக் கற்கள் மற்றும் தங்க நகை ஆணையம் தெரிவித்துள்ளது.