வடக்கு – கிழக்கில் 2ஆம் திகதி வரையில் மழை தொடரும்!
[2025-04-28 16:19:01] வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் தற்போது கிடைக்கும் மழை எதிர்வரும் 02ஆம் திகதி வரை தொடரும் வாய்ப்புள்ளதாக யாழ். பல்கலைக்கழக புவியியற்துறை தலைவர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
பலாலி வீதி திறப்பு; முதலாம் திகதி காங்கேசன்துறை வரை சிற்றூர்திகள் சேவை ஆரம்பம்!
[2025-04-28 12:42:16] எதிர்வரும் முதலாம் திகதியிலிருந்து 764 வழித்தட சிற்றூர்திகள் யாழ்ப்பாணத்திலிருந்து பலாலி வீதியூடாக காங்கேசன்துறை வரையில் சேவையில் ஈடுபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விதிகளை மீறி செயற்படும் ஒழுக்காற்று உத்தியோகத்தர்கள்; யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மானியங்கள் ஆணைக்குழுவில் முறைப்பாடு!
[2025-04-28 11:48:22] யாழ். பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மீதான ஒழுக்காற்று நடவடிக்கைகளின் போது மாணவ ஒழுக்காற்று உத்தியோகத்தர்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் ஒழுக்காற்று விதிகளை மீறி, தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கமைவாக நடந்து கொள்வதாக பல்கலைக்கழக மாணவர்கள் மூவர் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு முறைப்பாடு செய்துள்ளனர்.
கிளிநொச்சியில் கடும் மழை; வீதிகள் மற்றும் வீடுகள் வெள்ளத்தில் மூங்கியது!!
[2025-04-27 17:11:15] கிளிநொச்சியில் இன்றைய தினம் (27) மதியம் சுமார் ஒரு மணி நேரம் பெய்த கடும் மழை காரணமாக பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டு பல வீதிகள் மற்றும் வீடுகள் வெள்ளத்தில் மூங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
14 வயது சிறுமி துஷ்பிரயோகம்! மூவர் கைது;
[2025-04-27 13:21:33] யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை பகுதியில் 14 வயது சிறுமியை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் மூவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயர் பாதுகாப்பு சிறையில் இருக்கும் ஹரக் கட்டாவிடமிருந்து கையடக்கத் தொலைபேசி மீட்பு!
[2025-04-27 12:22:03] தங்காலை பழைய சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிரபல போதைப் பொருள் வர்த்தகரான ஹரக் கட்டாவிடம் இருந்து கையடக்கத் தொலைபேசி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உயர்தர பரீட்சையில் சாதனை படைத்த வவுனியா மாணவர்கள்!
[2025-04-27 10:29:04] உயர்தர பரீட்சையில் வவுனியா மாவட்டத்தில் கணிதப் பிரிவில் கனகராயன்குளம் மகாவித்தியாலய மாணவனும், கலைப் பிரிவில் முஸ்லிம் மகாவித்தியாலய மாணவி ஒருவரும் மாவட்ட மட்டத்தில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
யாழ் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை: அதிகரித்துள்ள நோய்த்தாக்கம்..!
[2025-04-26 21:57:57] யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நால்வருக்கு சிக்கன்குனியா உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
சற்றுமுன் வெளியானது உயர்தர பரீட்சை பெறுபேறுகள்...!
[2025-04-26 20:59:18] 2024 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர் தரப் பரீட்சையின் பெறுபேறுகள் சற்றுமுன்னர் வெளியாகியுள்ளது.
மனைவியின் தகாத உறவு - அந்தரங்க உறுப்பில் சூடு வைத்த கணவன்!
[2025-04-26 11:58:53] மின்னழுத்தியால் மனைவியின் அந்தரங்க உறுப்பில் சூடு வைத்து காயப்படுத்தியதாக கூறப்படும் கணவன் ஹத்தரலியத்த பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ். போதனாவில் வைத்தியரின் பணத்தை திருடியவர் கைது!
[2025-04-26 11:26:45] யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைத்தியர் வரின் ஆயிரம் பிராங் பணத்தினை திருடிய குற்றச்சாட்டில் வைத்தியசாலை பணியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழில் இணையக் குற்ற விசாரணைப் பிரிவு ஆரம்பம்!
[2025-04-26 10:42:01] யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் இணையக் குற்ற விசாரணைப் பிரிவு பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
சமூக பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கு ஊக்குவிப்பு கொடுப்பனவு;
[2025-04-25 12:44:22] யாழ்ப்பாண மாவட்டத்தின் 15 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் ஓய்வூதிய திட்ட நடைமுறைப்படுத்தலை சிறப்பாக மேற்கொண்ட உத்தியோகத்தர்களுக்கு ஊக்குவிப்பு கொடுப்பனவு மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களினால் வழங்கிவைக்கப்பட்டது.
கிளாலியில் பற்றை காணியிலிருந்து பெருந்தொகை போதைப்பொருள் மீட்பு!!
[2025-04-25 12:01:26] யாழ்ப்பாணம், கிளாலி பகுதியில் இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் மற்றும் பளை பொலிஸார் இணைந்து மேற்கொண்ட கூட்டு நடவடிக்கையின் போது சுமார் 08 இலச்சம் ரூபாய் மதிப்புள்ள கேரள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இன்று இடம்பெற்ற பேருந்து விபத்தில் பாடசாலை மாணவர்கள் உட்பட 28 பேர் காயம்..!
[2025-04-25 11:36:31] பதுளை, மஹியங்கனை, திஸ்ஸபுர பிரதேசத்தில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் பாடசாலை மாணவர்கள் உட்பட 28 பேர் காயமடைந்துள்ளதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர்.
நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு: 342 பேர் கைது...!
[2025-04-25 11:17:03] நாடளாவிய ரீதியில் பொலிஸாரால் நேற்று மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது போதை பொருட்களுடன் 342 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை.
[2025-04-24 21:30:36] எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலை முன்னிட்டு மே மாதம் 5ஆம் மற்றும் 6ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்குவதட்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.