ஏப்ரல் 1 முதல் பால் தேநீரின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கிறது.
[2025-03-20 12:44:46] இறக்குமதி செய்யப்பட்ட 400 கிராம் பால் மா பாக்கெட்டின் விலை அதிகரிப்பால், ஏப்ரல் 1 முதல் ஒரு கப் பால் தேநீரின் விலை ரூ.10 உயரும் என்று அகில இலங்கை சிற்றுண்டி மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்திய கடற்பரப்பில் தத்தளித்த யாழ் மீனவர்கள்.! அருகில் கஞ்சா பொட்டலங்கள் இருந்ததால் தீவிர விசாரணை;
[2025-03-20 11:44:47] இந்திய கடற்பரப்பில் இலங்கை மீனவர்கள் இருவர் படகில் தத்தளிப்பதாக அந்நாட்டு மரைன் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அவர்களை மீட்டுள்ளனர்.
குறித்த கடற்பகுதியில் கஞ்சா பொட்டலங்கள் காணப்பட்டமையினால் குறித்த மீனவர்களுக்கு அதில் தொடர்பு உள்ளதா என்பது குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர் என தெரிவிக்கப்படுகிறது.
தமிழக படகோட்டிகளுக்கு 06 மாத சிறை தண்டனை! மீனவர்கள் கடும் நிபந்தனைகளுடன் விடுதலை;
[2025-03-20 10:31:47] அத்துமீறி நெடுந்தீவு கடற்பரப்பினுள் படகினை செலுத்திய, தமிழக படகோட்டிகள் இருவருக்கு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்று 06 மாத சிறைத்தண்டனை விதித்துள்ளதுடன், இருவருக்கும் தலா 4 மில்லியன் ரூபாய் தண்டப்பணமும் விதித்துள்ளது.
பொலிஸாரை தாக்கிவிட்டு தப்பி ஓடிய சந்தேகநபர்!
[2025-03-19 17:19:33] யாழ்ப்பாணம், தெல்லிப்பழையில் கைது செய்யச் சென்ற பொலிஸார் மீது சந்தேகநபர் ஒருவர் தாக்குதல் நடாத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.
நாடாளுமன்றில் அர்ச்சுனா எம்.பிக்கு விதிக்கப்பட்ட தடை ! சபாநாயகரின் அதிரடி நடவடிக்கை:
[2025-03-19 15:47:51] இலங்கை நாடாளுமன்ற மரபுகளுக்கு மாறாக செயற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா மீது தற்காலிகமாக தடை ஒன்றை விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன இன்று (19) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
கட்டுப்பணம் செலுத்தும் காலம் இன்றுடன் நிறைவு!
[2025-03-19 13:04:22] உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் காலம் இன்று (19) நண்பகல் 12.00 மணியுடன் நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்வது நாளை (20) நண்பகல் 12.00 மணியுடன் முடிவடையவுள்ளது.
யாழ்ப்பணம் மாவட்டத்தில் 11,081 குடும்பங்களுக்கு காணிகள் இல்லை..!
[2025-03-19 12:28:01] யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 11 ஆயிரத்து 81 குடும்பங்கள் தமக்குக் காணிகள் இல்லை என்றும், காணிகளை வழங்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளன என்று யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அஸ்வெசும நலன்புரி நன்மைகள் திட்டத்தில் ஏட்படவுள்ள மாற்றம்..!!
[2025-03-19 11:33:11] தற்போது நடைமுறையிலுள்ள அஸ்வெசும உதவி வழங்கும் திட்டத்தின் கீழ் வழங்கப்படுகின்ற கொடுப்பனவுகள் கீழ்வருமாறு திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
பரீட்சாத்திகளிடம் அத்துமீறலில் ஈடுபட்ட மர்ம நபர்கள்: யாழில் சம்பவம்..!!
[2025-03-18 21:56:53] நேற்றையதினம் யாழ்ப்பாணத்தில் க.பொ.த.சாதாரணதரப் பரீட்சை எழுதிவிட்டுத் திரும்பிய மாணவ, மாணவிகளிடம் உயர்தர வகுப்புகளுக்கான விளம்பரக் கையேடுகளைப் பெற்றுக்கொள்ளுமாறு மர்ம நபர்கள் பலவந்தமாகத் திணித்துள்ளனர்.
விடுதலைப் புலிகள் உட்பட 67 அமைப்புகளுக்கு இந்தியா தடை!
[2025-03-18 13:25:11] தமிழீழ விடுதலைப் புலிகள் உட்பட 67 அமைப்புகள் அடங்கிய தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளின் திருத்தப்பட்ட பட்டியலை இந்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
பால்மா விலையில் ஏற்படவுள்ள மாற்றம்!
[2025-03-18 12:44:00] எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் பால் மாவுப் பொருட்களின் விலையை 4.7 வீதத்தால் அதிகரிப்பதற்கு இறக்குமதியாளர்கள் தீர்மானித்துள்ளனர்.
நாட்டின் பல பிரதேசங்களில் நாளை நீர் வெட்டு..!!
[2025-03-18 10:55:39] நாளை (19) காலை 8 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை 16 மணித்தியாலங்களுக்கு நாட்டின் பல பகுதிகளில் நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளது.
வாகன தரிப்பிடமாக மாற்றப்பட்டுள்ள பளை மத்திய பேருந்து நிலையம்;
[2025-03-17 16:50:14] கிளிநொச்சி பளை மத்திய பேருந்து நிலையத்துக்குள் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் துவிச்சக்கர வண்டிகளை நிறுத்தி வாகன தரிப்பிடமாக மாற்றப்பட்டுள்ளதாக பயணிகள் குற்றம் சுமத்துகின்றனர்.
க:பொ:த சாதாரண தர பரீட்சை ஆரம்பம்; கையடக்க தொலைபேசிகளுக்கு தடை!
[2025-03-17 15:33:55] 2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரணதர பரீட்சை நாடாளாவிய ரீதியில் இன்று ஆரம்பமான நிலையில், கையடக்க தொலைபேசிகளுடன் இணைக்கக்கூடிய அனைத்து உபகரணங்களும் பரீட்சை நிலையத்திற்குள் கொண்டுசெல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை இரட்டைக் கொலை! 15 வயது சிறுமி கைது!!
[2025-03-15 11:57:46] திருகோணமலை, மூதூர் பகுதியில் பெண்கள் இருவர் வெட்டுக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் 15 வயது சிறுமி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
திருகோணமலையைத் தொடர்ந்து கொழும்பில் சகோதரர்கள் இருவர் வெட்டிக் கொலை!!
[2025-03-15 11:22:35] நேற்றையதினம் திருகோணமலையில் இரு பெண்கள் வெட்டிக்கொல்லப்பட்ட நிலையில் இன்று (15) கொழும்பில் இரு சகோதரர்கள் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா இன்று ஆரம்பம்.
[2025-03-14 11:19:14] கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா இன்று ஆரம்பமாகி நாளை சனிக்கிழமை வரை நடைபெறவுள்ளது.