கட்டாரிலுள்ள இலங்கையர்களுக்கான அவசர அறிவிப்பு..!
[2025-06-24 12:25:59] கட்டாரில் உள்ள இலங்கையர்கள் தாங்கள் வசிக்கும் இடங்களில் பாதுகாப்பாக இருக்குமாறும், ஏதேனும் அவசரநிலை ஏற்பட்டால் +9471182587 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் என்றும் கட்டாரில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.
சிறைக்கைதியை மோசடியாக விடுவித்த அனுராதபுரம் சிறைச்சாலை அத்தியட்சகருக்கு பிணை!
[2025-06-24 10:47:56] ஜனாதிபதி பொதுமன்னிப்பை பயன்படுத்தி சிறைக்கைதியொருவரை மோசடியாக விடுவித்த குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்ட அனுராதபுர சிறைச்சாலை அத்தியட்சகருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
யாழில் உள்ளூராட்சி தேர்தலில் வெற்றி பெற்ற பெண்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு.!
[2025-06-23 19:14:18] யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள உள்ளூராட்சி சபைகளில் போட்டியிட்டு வெற்றிபெற்ற பெண்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் நேற்று (22) ஞாயிற்றுக்கிழமை யாழ். சமூக செயற்பாட்டு மையத்தில் ஏற்பாட்டில் நடைபெற்றது.
தமிழ்நாட்டில் கரையொதுங்கியுள்ள யாழ்ப்பாண பைபர் படகு.! தொடரும் மர்மம்!!
[2025-06-23 12:02:00] தமிழ்நாட்டின் நாகப்பட்டின மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை பழைய கலங்கரைவிளக்கம் அருகே இலங்கை நாட்டை சேர்ந்த புதிய பைபர் படகு இயந்திரத்துடன் கரை ஒதுங்கி உள்ளது.
இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கு விடுத்துள்ள விசேட அறிவிப்பு...!
[2025-06-23 10:53:11] இஸ்ரேலின் தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு அங்குள்ள இலங்கையர்கள் ஜோர்தானின் அம்மானில் இருந்து இந்தியாவின் புது டில்லிக்கு செல்லும் விமானங்களில் பயணிக்க இந்திய அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளது.
குழந்தை சத்திர சிகிச்சை தொடர்பான மூன்று நூல்கள் வெளியீடு!
[2025-06-23 10:35:30] குழந்தை சத்திர சிகிச்சை நிபுணரும் சிரேஷ்ட விரிவுரையாளருமான வைத்தியர் பா.சயந்தன் எழுதிய குழந்தை சத்திர சிகிச்சை தொடர்பான மூன்று நூல்கள் யாழ்ப்பாணத்தில் வெளியிட்டு வைக்கப்பட்டது.
யாழில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் உட்பட இருவர் கைது.!
[2025-06-22 07:00:07] யாழ்ப்பாணம் நாவாந்துறை பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் ஒருவரும் இளைஞர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இலங்கை வரும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர்.!
[2025-06-21 11:45:31] ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் volker türk எதிர்வரும் ஜுன் மாதம் 23ஆம் திகதி இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார். 2016ஆம் ஆண்டுக்குப் பிறகு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான ஆணையாளர் இலங்கைக்கு மேற்கொள்ளும் முதல் விஜயம் இதுவாகும்.
நாடாளுமன்ற உறுப்புரிமையில் இருந்து விலகினார் பிரதி அமைச்சர் ஹர்ஷன.! வழங்கப்படவுள்ள புதிய பதவி!!
[2025-06-21 10:57:50] நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷண சூரியப்பெரும தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகியுள்ளார்.
யாழில் இந்திய துணை தூதுவரை சந்தித்த பிரிட்டன் தூதுவர்.!
[2025-06-20 21:41:03] யாழில் இந்திய துணை தூதுவரை சந்தித்த பிரிட்டன் தூதுவர்.
யாழ்.மாவட்ட அரச அதிபராக மருதலிங்கம் பிரதீபன் நியமனம்!
[2025-06-20 21:21:37] யாழ்ப்பாண மாவட்டத்தின் நிரந்தர அரசாங்க அதிபராக மருதலிங்கம் பிரதீபன் அமைச்சரவை அனுமதியின் பிரகாரம் நியமிக்கப்பட்டுள்ளார்.
கஞ்சா கலந்த மாவா பாக்குடன் இளைஞர் கைது.!
[2025-06-20 10:15:41] யாழ்ப்பாணத்தில் கஞ்சா கலந்த மாவா பாக்குடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
யாழில் கணவன், மனைவி இணைந்து போதைப்பொருள் வியாபாரம்; கைதான கணவன், மனைவி தலைமறைவு.!
[2025-06-19 20:10:34] யாழ்ப்பாணத்தில் கணவன், மனைவி இருவரும் இணைந்து போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டுவந்த நிலையில், கணவன் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மனைவி தலைமறைவாகியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கண்ணிவெடி அகற்றும் பணியாளர்களின் தியாகத்தாலேயே மக்களின் மீள்குடியமர்வு சாத்தியமாகியிருக்கின்றது:
[2025-06-19 12:42:47] மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் பணியாளர்களின் தியாகத்தாலேயே பல இடங்களில் மக்களின் மீள்குடியமர்வு வெற்றிகரமாக சாத்தியமாகியிருக்கின்றது. அவர்களின் தியாகத்துக்கு மதிப்பளித்துப் பாராட்டுகின்றேன் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார்.
யாழில் உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு!
[2025-06-19 11:44:28] யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் உருக்குலைந்த நிலையில் முதியவர் ஒருவரது சடலம் நேற்றையதினம் மீட்கப்பட்டது.
பலாலி வீதி இரவு 7.00 மணி வரை திறந்திருக்கும்.!
[2025-06-18 13:30:09] யாழ்ப்பாணம் பலாலி வீதி போக்குவரத்திற்காக இரவு ஏழு மணி வரை திறக்கப்பட்டு இருக்கும் என தேசிய மக்கள் சக்தியின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் தெரிவித்துள்ளார்.
பிரித்தானிய தூதுவர்- சுமந்திரன் யாழில் சந்திப்பு;
[2025-06-18 12:49:20] யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைக்கான பிரித்தானிய தூதுவரை தமிழரசு கட்சியின் பதில் பொதுச் செயலாளர் எம். ஏ. சுமந்திரன் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.